பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு: ரா. புருடோத்தம நாயுடு &ア ஒரு சமயம் (1962 என்பதாக நினைவு) திருப்பூர் K. R. சுப்பிரமணியம் (இவர் ஒரு சோதிடர்) திருவேங்கட வன்மீது தாம் பாடிய ஒரு நூலை திருமலையில் வெளி யிடவும் அந் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கவும் திரு நாயுடு அவர்களைக் கேட்க , அதற்கு அவர் ' என்னை விடப் பன் மடங்கு சிறந்த பேராசிரியர் ரெட்டியார் திருப்பதியிலேயே பணியாற்றி வருகின்றார். அவரைக்கொண்டு உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளலாமே என்று கூறி என்னிடம் ஆற்றுப் படுத்தினார். இதைக் கேட்டதும் எனக்கோ அளவிற்ற மகிழ்ச்சி, மாருதி அல்லனாகில் நீ எனும் மாற்றம் பெற்றேன்' என்று இராமன் தன்னைத் துர்தனாகத் தேர்ந்தெடுத்ததாக அங்கதன் மகிழ்ச்சி யடைந்ததுபோல எனக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. சைவ னாக இருந்தாலும் என்னை ஒரு வைணவனாகக் கருதிய திரு. நாயுடுவின் பரந்த நோக்கை இப்போது நினைத் தாலும் நெஞ்சம் குளிருகின்றது, இத்தகைய பரந்த நோக்குடைய வேறொரு வைணவப் பெருமகனைக் காண்டல் அரிது. 1984-இல் штват தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை’ என்ற ஒரு நூலை வெளியிட்டேன். அதற்குத் திரு. நாயுடு அவர்களிடமிருந்து அரியதோர் அணிந்துரை பெற வேண்டும் என்று என் மனம் விழைந்தது. வேண்டு கோள் விடுத்தேன். அன்புடன் ஒப்புக்கொண்டு அணிந் துரை வழங்கி என்னை வாழ்த்தினார். பொதுவாக நூலின் போக்கு விளக்க முறும் முறையிலும் ஆராய்ச்சிப் பாங்கிலும் அமைந்துள்ளது. நண்பர் திரு ரெட்டியாரின் தொண்டுள்ளத்தில் முளைத்தெழுந்த இந்நூல் பல தமிழ் மக்கள் உள்ளத்திற்கு நல்லவிருந்தாக அமையும் என்பதற்கு ஐயம் இல்லை. நீலமேனி நெடியோன் அருளால் இவர் 3. யுத்த அங்கதன் தூது-13.