பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பேராசிரியர் எஸ்.வையாபுளிப்பிள்ளை சிலரது புகழ் அவர்கள் செய்த தொண்டினால் நிலைபெற்று நிற்கின்றது. ஏன்? தொண்டே அவர்களின் பெயரை நம் நினைவிற்குக் கொணர்கின்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை தோன்றியநாள்முதல் ஆராய்ச்சிக்காக ஏற்பட்ட துறையாகவே இருந்து வந்துள்ளது. இதில்பலபெரியார்கள் பணியாற்றி வந்துள்ள னர். தமிழ்ப்பேரகராதி பேராசிரியர் எஸ். வையாபுரிப் இள்ளை யை நினைக்கச் செய்கின்றது. ஈட்டின் தமிழாக்கம்’ திரு. பு.ரா. புருடோத்தம நாயுடுவை நினைவுக்குக் கொணர்கின்றது. பூரீபுராணம் (சமண நூல்) , தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி, திராவிட மொழி மூவிடப் பெயர் ஆகிய நூல்கள் பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடர. ஜூலு ரெட்டியாரை நினைக்கச் செய்கின்றன. ஆங்கிலம் -தமிழ்ப் பேரகராதி டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியாரை நினைவு கூரச் செய்கின்றது. இவர்கள் யாவரும் தம்மையே மறந்து பணியே பரமன் வழிபாடு (Work is worship) என்ற நினைவுடன் தமிழ்ப் பணி புரிந்து புகழ்பெற்றவர்கள். இவர்களைப் பகவத்கீதை யின்மொழியில் கூறினால் கர்ம யோகிகள் என்று சொல்லி வைக்கலாம். 1944 என்று நினைக்கின்றேன். பன்மொழிப் புலவர் மயிலைத் தொல்காப்பியர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தபோது ஒரு நாள் அடியேனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கு இட்டுச் சென்றார். அன்று