பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 夏05 இலக்கியபோர்-ஆராய்ச்சிப் போர்-இவற்றையெல்லாம் நான் இதழ்களில் படித்து மகிழ்ந்ததுண்டு. நான் கல்லூரியில் படித்த காலத்தில் இராகவய்யங்கார் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் இவர்கள் புரிந்து வந்த சொற்போர்களை இதழ்களில் படித்தது இன்றளவும் நினைவில் உள்ளது. இந்தப் போரில் திரு இராகவய் பங்கார் தோல்வியுற்றார். ஒரு கட்டுரைக்கு அவர் மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் இலங்கையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த இதழொன்றில் இராகவன்’ என்ற புனை பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ணுற்ற பாரதியார் இராகவன்’ என்ற புனைபெயர் இராகவ அய்யங்காராகத்தான் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார். நகைச்சுவையாக (ஆனந்த விகடனில் என்பது நினைவு) மறைந்து நின்று எய்தவன் சின்ன இராகவனா? பெரிய இராகவனா” என்று எழுதினார். இதனால் இராமாயணத்தில் வாலியின்மீது மறைந்து நின்று இராமன் கணைதொடுத்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்து நம்மை மகிழ்விக்கின்றது. என் வாழ்வில் இங்ங்ணம் விஷயங்களை விட்டு விலகாமல் நேர்தாக்குதலின்றி வெளிவந்த எழுத்துகள் என் மனத்தைக் கவர்ந்துள்ளன. இஃது ஒர் இலக்கிய lTFT . இராகவய்யங்கார் . வயதில் மூத்தவர். மு. இராகவய்யார் இளையவர். மைத்துனர் முறையினர். இருவரும் இலக்கியச் சிம்மங்கள் 5 ஆழ்ந்த புலமையுள்ளவர்கள்.