பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தந்தை பெரியார் 'அறம் தோய்ந்து மறம் வளர்ந் தோங்கும் காலத் தில் திருமால் அவதரித்து நல்லோர்களைக் காத்து அல்லோர்களை அழிக்கின்றான்’ என்பது அவதார இரகசியங்களில் ஒரு தத்துவம். இங்ஙனமே மூடப் பழக்கங் களும் மூடநம்பிக்கைகளும் ஆகிய முடை நாற்றம் சமுதாய மாகிய காட்டில் அளவுக்குமீறி வீசும்போது அதனை அகற்றுவதற்காகக் கற்பூரப் பெட்டகம் போல் பெரியார் ஒருவர் பிறப்பார் என்பது அடியேனின் கருத்து. தந்தை பெரியாரின் பிறப்பும் அவர் ஆற்றிய தொண்டும் இத் தகையது . தீவிரக்காங்கிரசு வாதியாக இருந்த பெரியார் அக்கட்சியில் சாதி வேறுபாடு தலைதுாக்கி நின்ற காலத். தில் அதனை விட்டுப் பிரிந்து தன்னந்தனியனாக நின்று சமுதாயச் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சுமார் எழுபத்தைந்து ஆண்டுக் காலம் தமிழகத் தில் நடையாடினார் என்பதைத் தமிழகம் நன்கு அறியும். தமிழர்கள் நன்கு அறிவார்கள். தந்தை பெரியார் அவர்களை தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று பொருத்தமாகக் குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா. உயர் எண்ணங்கள் மலரும் சோலை’ என்று போற்றியுரைப்பர் பாவேந்தர் பாரதிதாசன். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை பட்டை தீட்டப் பெற்ற செயற்கை வைரம் அல்ல; வைரம் பாய்ந்த சிந்தனை என்று அறிஞர் உலகம் கருதும்.