பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆盟酸 மலரும் நினைவுகள் பெரியாரை எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத் தவர் திரு . கங்காதரன் என்ற என் அரிய நண்பர். இவர் ஒரு ஆயுள் காப்பு நிதி நிறுவனத்தின் ஏஜெண்டு. நான் அலுவ வில் அமர்ந்ததும் ரூ 4000க்கு இவரிடம் ஆயுள்காப்பு நிதி பத்திரத்திற்குப் பதிவு செய்து கொண்டேன் ; தொடர்ந்து என் வகுப்புத் தோழர் .E.B. சுந்தரம் (8 ஆம் வகுப்புத் தோழர்) என்பவரிடம் ரூ 2000/-க்கு ஒரு பத்திரத்திற்குப் பதிவு செய்து கொண்டேன். இருவரும் சில ஆண்டுகள் துறையூரில் இருந்தார்கள். திரு கங்காதரன் என்பவர் வயதில் பத்து ஆண்டுகள் எனக்கு மூத்தவர். குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கால் 1945ஆம் ஆண்டு வாக்கில் செங்கணாச்சாரி (கேரளம்) சென்றவர்தான்; பின்னர் துறையூர் திரும்பவில்லை. என்ன ஆனார் என்பது பற்றி ஒரு செய்தியும் இல்லை. திரு. சுந்தரம் நாமக்கல்லில் குடியேறினார். வழக்கு விஷயமாக நாமக்கல்லுக்குப் போகும்போதெல்லாம் எங்காவது சந்தித்துப் பேசுவ துண்டு. பெரியார் அவர்களைச் சந்திப்பதற்குச் சேடத் தெருவிற்குப் போகும் போதெல்லாம் சேடத்தெருவில் பல இளைஞர்கள் என் நண்பர்களானார்கள். நாளடைவில் நண்பர் குழாம் பெருகியது. பள்ளி ஆண்டு விழாவிற்கு இவர்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு வந்து எங்களைப் பெருமைப் படுத்துவர். நான்காம் படிவம் திறப்பதற்கு (படிப்படியாக உயர் நிலைப் பள்ளியாக்குவதற்கு இசைவு கோரிக் கல்வி இயக்குநருக்குப் பள்ளி விண்ணப்பம் விடுத்தது. பரிந்துரை யுடன் இவ்விண்ணப்பம் சென்னை செல்லுகின்றதா என்பதை நோட்டம் பார்ப்பதற்குக் கோவையிலுள்ள upol Gué àdio gliaisrārango (Divisional Inspector of Schools) சந்தித்துப் பேசிவிட்டுத் துறையூர் திரும்பும் போது ஈரோட்டில் இறங்கினேன். பள்ளியின் நிர்வாகக் குழு அமைக்கும் விஷயமாக ஈரோடு மகாஜனப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த திரு M. R. பெருமாள்