பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篆 | 8 - மலரும் நினைவுகள் யிருந்தோரிடையே பலத்த கைத் தட்டல். மேடை ஏறிய வுடன் முதலில் அண்ணா பேசியது: பெரியோர்களே, தோழர்களே, நான் இவர்களை வணங்கியது உங்கட்குப் புதிராக இருந்தது போலும். அதனால்தான் கைதட்டினர் கள் என்று நினைக்கின்றேன். ஏன் வணங்கினேன் தெரி யுமா? இவர்கள் இருவரும் என் அரசியல் குருமார்கள் . காலில் முள் குத்தி சீழ் பிடித்து வலி தாங்க முடியாத நிலை யில் இவர்களிடம் சென்று என்ன செய்வது என்று யோசனை கேட்டால் தாடியில்லாத பெரியவர் அப்பா தம்பி, கவனமாக முள்ளை எடுத்து விட்டு சீழையும் அகற்றி மருந்து போடு; சரியாகி விடும்’ என்று சொல்லு: வார். அவர் அருகிலிருக்கும் வெண் தாடிப் பெரியவர், "காலையே வெட்டி விடு; சரியாய் விடும் என்று சொல்லு வார். இது தான் இப்பெரியார்கள் தரும் உபதேசத்தி லுள்ாே வேற்றுமை' என்று சொன்னாராம். கூட்டத்தி னரின் கைதட்டல் இரண்டு மணித் துளிகள் வரை விண்ணைப் பிளந்ததாம். முன் வரிசையிலிருந்த இரண்டு பெரியார்களும் கூட மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து கைதட்டிக் கொண்டிருந்தார்களாம். இந்த இரு பெரியார்களும் ஏன்? இதைப் பேசிய அண்ணாவும்-வள்ளுவப் பெருமா னின் செயற்கரிய செய்வார் பெரியர் (குறள் - 26) என்ற திருவாக்கிற்கு இலக்கியமாகத் திகழ்பவர்கள். நான் திருப்பதி சென்று அங்குப் பணியாற்றிய காலத் தில் (1960-1977)-1975-இல் என நினைக்கின்றேன்-- பெரியாரின் ஆண்டு விழா மலர் ஒன்றில் எழுத்துச் சீர்திருத்தம்' பற்றி கட்டுரையொன்று வரைந்தனுப்புமாறு கேட்டிருந்தார் என் அரிய நண்பர் கே. வீரமணி. அங்ங்னமே கட்டுரையொன்று வரைந்து அனுப்பி யிருந்தேன் அதில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் கூறியுள்ள பல சிறந்தக் கரு த் து க ளு க் கி ைட யி ல் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தை ஈண்டு நினைவு கூர் கின்றேன். தந்தை பெரியாரவர்களின் கருத்துகள் புதுமை,