பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியார் # 19. யாகவும் புரட்சிகரமாகவும் இருப்பதால் அவை மக்களிடம் உடனே செரிமானம்’ ஆவதில்லை. ஆனால், அவரிடம் வெறுப்பினைக் காட்டி வருபவர்களே காலப் போக்கில் அவற்றைச் செரிமானம் செய்து அவற்றின் பெருமையை யும் அருமையையும் நன்கு அறிவர். ஆனால் சில சமயம் தம் கருத்துக்களை மந்தமதி மாணாக்கருக்கு விளக்க முடியாத ஆசிரியர்கள் பொறுமை இழந்து சினமுற்று அவர் களைக் கையினாலும் கோலினாலும் புடைப்பது போன்று நம் தந்தை அவர்களும் தம்முடைய கொள்கைகளை மூடப் பழக்கங்களில் மூழ்கியுள்ள பொதுமக்களுக்கு விளக்கும் போது சில முரட்டு முறைகளை (பிள்ளையார் சிலை களை உடைத்தல், இராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்றவை) கையாள்வர் இவர் கூறிய எழுத்துச் சீர்த்திருத்தம் இப்போது ஒரளவு நடைமுறைக்கு வந்து விட்டது. சுமார் பத்து ஆண்டுகட்கு முன்னர் புரசைவாக்கத் திலுள்ள கிறித்தவ குருகுலச் சமய சித்தாந்தக் கல்லூரியில் ஈ. வே. ரா. தத்துவம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்று நடை பெற்றது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகப் பகுதிகளிலிருந்து பல பேராளர்கள் கலந்து கொண்டனர். திரு. வலம்புரிஜான் சிறப்புரை ஆற்றியதாக நினைவு. நானும் திரு.-N-கடிகாதலுமும்:(என் ஆராய்ச்சி மாணவர்) கலந்து.இகாண்டோம். பெங்களுரி விருந்து வந்து கலந்து கொண்ட சமய வட்டத் தலைவர் (Bishop) ஒருவர் மிகவும் காரசாரமாகப் பேசியது இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. பேச்சின் சாரம்: இந்து சமயத்திலுள்ள சாதி வேறுபாட்டின் கொடுமை களைத் தாங்க முடியாமல் நாம் மதம் மாறினோம். இங்கு வந்த பிறகும் சாதி வேறுபாட்டின் கொடுமைகள் நீங்கின 1. பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் (பெரியார் சுய மரியாதைப் பிரசார வெளியீடு, 50, ரண்டால்ஸ் சாலை, சென்னை-600007). பக். 62-63