பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ் கோவிந்தராஜுலு நாயுடு 123 பி. எஸ்சி, எல், டி. பட்டத்துடன் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த காலம் அது. அப்போது திரு நாயுடு அவர்கள் சென்னைச் சட்டக் கல்லூரியில் பேராசிரிய ராகவும் துணை முதல்வராகவும்பணியாற்றிக்கொண்டிருந் தார். இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்று வந்ததால் சென்னை முழுவதும் குண்டுவீச்சுக்கு அஞ்சி இரவு நேரத்தில் இருட்டடைப்பு (Black-out) செய்யப் பெற்றிருந்தது. கடற்கரைப் பகுதியையொட்டிய பகுதி களுக்கே விபத்து அதிகம் என்று கருதப்பெற்றதால் சட்டக்கல்லூரியை தியாகராய நகரில் ஒரு கட்டடத்தில் நடைபெற்று வந்தது. நினைவு-1: நான் சென்றபோது திரு. நாயுடு அவர்கள் வகுப்பில் இருந்தார். திரு. நாயுடு அவர்கள் அக்காலத்தில் இந்தியக் குற்றத்துறைத் தொகுதி' (Indian Penal Code)யை விளக்கி விரிவுரையாற்றுவதில் வல்லுநர் என்று புகழ் பெற்றிருந்தார். ஆங்கில இலக்கிய வகுப்பு நடத்துவதுபோல் இருக்கும் என்பார்கள். ஆதலால் தாழ்வாரத்தின் ஒரு பக்கம் இருந்தவாறு ஒரு பதினைந்து மணித்துளிகள் அவரது பேருரையைச் செவி மடுத்தேன். இதைக் கேட்டதும் அவர் புகழ் பெற்றிருந்தது உண்மைக்குப் புறம்பாக இல்லை என்பதை உணர்ந்தேன். தவிர, இந்தச் சட்டத் தொகுதி இலக்கிய நயத்துடன் மெக்காலே பிரபுவால் வரையப்பட்டது என்பதை நான் g)6:)l-Éangu guguil (Intermediate Class) Luigg, Gufr(3: (1934-36) அறிந்திருந்தேன். மெக்காலே பிரபுவின் ஒன்று விட்ட சோதரர் (Nephew) டிரவிலியன் மெக்காலேயால் எழுதப்பெற்ற மெக்காலே பிரபுவின் வாழ்க்கை வரலாறு என்ற நூல் பாடநூலாக இருந்தது. இது மிக அற்புதமான நூல். திருவாளர் சின்னசாமி அய்யர் (புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி) மிக அழகாகப் பாடம் நடத்தினார். இந்தச் சட்டம் இலக்கிய நயத்துடன் மிளிர்ந்ததால் முதியவர்கள் இதை மூளையிலும் இளைஞர்கள் தங்கள்