பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு I 37 கவனிக்கப் போகின்றனர்? எட்டாண்டுகள்வரை நான் தங்குவதற்குப் பல இடங்கள் தற்காலிகமாக அமைந்தன, தத்துவத்துறை ஒர் ஆண்டு, இந்தித் துறை 2 ஆண்டுகள், விலங்கியல் துறை 2ஆண்டுகள், தெலுங்குத் துறை ஒர் ஆண்டு, பெயர் சொல்ல முடியாத சாவடிபோன்ற பொது இடங்களில் 2 ஆண்டுகள். இப்படியாக நான் இடத்திற்கு இசை நாற்காலி (Musical Chair) விளையாட வேண்டி யிருந்தது. நினைவு-2: முதன் முதலாக இந்தித் துறையில் தான் எனக்கு இடம் தரப்பெற்றது. ஜமாபந்தி கணக்கப் பிள்ளை போல் ஒரே மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். இப்போது அருகிலிருந்த தத்துவத்துறையுடன் நெருக்க மான தொடர்பு உண்டாயிற்று. இதில் உள்ளூரைச் சார்ந்த டாக்டர் K.C. வரதாச்சாரியாரிடம் நெருங்கிப் பழகினேன். அவரையே வழிகாட்டியாகக் கொண்டு டாக்டர் பட்டத்திற்கு ஆய்வுசெய்ய விண்ணப்பித்தேன். இரண்டு மாதத்தில் இசைவு மறுக்கப் பெற்றது. வழக்கப் படிக் காலை நேரத்தில் துணைவேந்தர் திரு. நாயுடு அவர்களைச் சந்தித்துப் பேசினேன். தாம் இசைவு தரமறுத்தமைக்கு இரண்டு காரணங்கள் சொன்னார். (1) வழிகாட்டி பொருத்தமற்றவர்; தமிழே படிக்கத் தெரியாதவர். துறையறிவும் இவருக்குப் போதாது. (2) முதுகலை வகுப்பு தமிழில் இல்லாமல் தமிழில் பிஎச். டிக்கு ஆரிய முடியாது என்பவையே இரண்டு காரணங் கள். டாக்டர் K.C. வரதாச்சாரியாரைச் சிறிதும் பிடிக்காது என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரை வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஏமாற்றத்தால் தாக்குண்டு செயலற்ற நிலையில் ஒராண்டு கழிந்தது. என்றாலும் துணைவேந்தரைப் பார்க்கும் போதெல்லாம் இப்பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.