பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரும் நினைவுகள் I 3 ፅ 'நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்த திரு. நாயுடு அவர்கள் இங்ங்ணம் சிக்கலில் மாட்டிக்கொண்டதற்கு மேலும் காரணத்தை ஆராய்ந்ததில் இஃது ஆணவமலத் தின் செயற்பாடே என்பதை ஒருவாறு அறிந்துகொள்ள முடிந்தது. ஆன்மாவை விடாது பற்றியிருப்பது ஆணவ மலம். இது பற்றியிருக்கும்போது மனிதன் தான் செய்வது இன்னது என்பது கூட அறியாமல் செய்வான். செல்வர், அதிகாரம் பெற்றவர், உடற்பலம் மிக்கவர் இவர்களைப் பற்றும்போது இது செயற்படும் கொடுமையை நன்கு அறியலாம். ஆணவத்தை இருளோடு ஒப்பிடுவார்கள் சித்தாந்திகள். ஒருவிதத்தில் இஃது இருளை விடக் கொடியது. இருள் தன்னிடத்திலுள்ள பொருள்ை மறைக்கும்; தன்னை மறைக்காது . ஆனால் ஆணவம் தன் செயலை மறைப்பதுடன் தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் மறைத்து கிடக்கும் பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனாகாவிடினும், அவற்றை மறைத்துக் கொண்டிருக்கும் இருளாவது நமக்குப் புலனாகும். ஆணவம் நம் அறிவை மறைக்கின்றது; அதே சமயம் தன்னையும் மறைத்துத் தனது செயலையும் மறைக்கின்றது. இருள் வெளிப்பட்டுத் தன்னைக் காட்டிக்கொண்டே தனது தொழிலைச் செய்கின்றது. ஆனால் ஆணவம் வெளிப் படாமல் தன்னை மறைத்துக் கொண்டே தனது தொழிலைப் புரிகின்றது. இதனாலேயே ஆணவம் என ஒன்று உண்டு என்பதையும் அறிவு முழுமையடையாமைக் குக் காரணம் என்பதையும் உணரமுடிவதில்லை. ஆணவத் துள் அமிழ்ந்து ஆணவமே மயமாகக் கிடக்கும் இந்த நிலையில் அதற்கு அறிவு சிறிது கூட இருப்பதில்லை. இந்த நிலையில்தான் வரகூடிய விளைவைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் மருத்துவக் கல்லூரியில் தாம் பேசுவது இன்னதென யோசிக்காமல் ஆணவமலத்தின் செயற்பாட்டி னால் ஏதோ பேசிவிட்டார். அதன் விளைவுதான் இந்தப் பிரளய நிகழ்ச்சி. தாம் வகிக்கும் பெரிய பதவியால் இந்த மலம் செயற்படுவதையும் சிந்திக்க முடியவில்லை.