பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 互 ?5 கொண்டு இத்தகைய கூத்தை நடத்தி என்னை அலைக் கழிக்கின்றானோ என்றுகூட என் மனம் எண்ணத் தொடங்குகின்றது. அக்காலத்தில் சீநிவாசன் கணக்கு வழக்குகளை கோவிந்தராஜ சுவாமியின் பொறுப்பி லிருந்தது போல் பல்கலைக் கழகக் கணக்கு வழக்குகள் எல்லாம் இந்தத் துணைவேந்தர் கோவிந்த ராஜுலு நாயுடுவின் பொறுப்பில் இருந்ததாக நாங்கள் ஒற்றுமை நயம் கண்டு மகிழ்வதுண்டு. நினைவு-6 : நானும் பிஎச்.டி.க்குப் பதிவு செய்து கொள்ளும் முயற்சியைக் கைவிடவில்லை. பார்க்கும் போதெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தேன். முதுகலை வகுப்பு இல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் துணைவேந்தர். வடமொழித் துறையில் முதுகலை வகுப்பு உள்ளது. தமிழ் நன்கு அறிந்த டாக்டர் வரதாச்சாரியுை வழி காட்டியாகக் கொண்டு செய்ய நினைக்கின்றேன்" என்றேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்தித் துறையில் உள்ள திரு. எஸ். சங்கரராஜ நாயுடு என்னைப் போலவே ஒரு தனி விரிவுரையாளர், அவர் இந்தியைச் சிறுதும் அறியாத பேராசிரியர் ரா. பி. சேதுபிள்ளையை வழிகாட்டியாகக் கொண்டு செய்து பட்டம் பெற வில்லையா? என்றேன். அதற்கு அவர், சென்னையில் அதிகமாகப் பால் உற்பத்தி செய்துள்ளனர். சிறிது தண்ணீர் கலந்தால் ஒன்றும் தெரியாது. இங்குப் பாலே உற்பத்தி இல்லை. எடுத்த எடுப்பில் தண்ணீரை ஊற்றச் சொல்லுகின்றீர்களே' என்று சொல்லி நகைத்தார் . துணைவேந்தர் பேச்சில் சதுரர். எவர் எந்த உதவியை நாடினாலும் அதைச் செய்ய முடியாது என்ற நிலையிலும் இனிமையாகப் பேசி மகிழ்ச்சியுடன் திரும்பும்படிச் செய்து விடுவார். எல்லா வழிகளிலும் முயன்று முடிந்து விட்டது. இனி, கும்பகோணம் வழி என்ற ஒரே வழிதான் உண்டு அதில் முயன்று பார்க்க வேண்டியதுதான்' என்று