பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு I 39 இதயத்தில் நீண்ட நாள் கருக் கொண்டிருந்த கருத்து நூல் நிலையம் அந்தக் கருத்து செயற்படுத்தின மைக்கு அறிகுறி யாக வழங்கப் பெற்றது வெள்ளியாலாகிய நூலகக் கட்டடச்சின்னம்; நிலையான, நிரந்தரமான நினைவுச் சின்னம் , இந்த விருந்தேற்பு விழாவிற்கு வந்திருந்த முந்தைய துணைவேந்தர் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது நானும் என் வழிகாட்டி யாக அமைந்த டாக்டர் வரதாச்சாரியும் அவரை மரியாதைக்காகப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது என் ஆய்வைப் பற்றி அன்பாக விசாரித்தார்கள். எழுத்துத் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறினோம். விரைந்து முடித்துப் பட்டம் பெற வேண்டுமென்று வாழ்த் தினார்கள். சென்னையிலிருந்து கொண்டு தன்னாலியன்ற வரை தமிழக அரசின் மர்னியம் கிடைக்க முயலுவதாகவும் அன்புடன் கூறினார்கள். தமிழ்த்துறை வளர்ச்சிக்குத் தம் காலத்தில் உதவ முடியாவிடினும் எதிர் காலத்தில் ஏழுமலையான் திருவருளால் அது வளர்ந்து சிறந்து திகழும் என்று வாழ்த்தினார்கள். நினைவு-8 : சென்னைக்குச் சென்ற பிறகு இவரது பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. இவர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய மொழிகளின் நூல் நிறுவனத் §1–Lög; fig (The Southern Language Book Trust? ஏதாவது மதிப்பூதியம் (Honoratium) வழங்க முயன்றார் டாக்டர் ஏ. எல். முதலியார். இந்த நிறுவனத்தின் பொருளாதார நிலையும் சீர்கெட்டுக் கிடந்தது. இந்த நிறுவனத்தின் இயக்கத்தைக் கவனித்து வந்தவர்கள் சென்னை, திரு வேங்கடவன் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள். திரு கோவிந்தராஜுலு நாயுடுவிற்குப் பிறகு திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணைவேந்தராக பதவி ஏற்றவர் டாக்டர் W. C. வாமன்ராவ் அவர்கள்