பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重垒& மலரும் நினைவுகள் நிர்பந்தங்கள் ஏற்பட்டன. போகும்போதெல்லாம் குமரி மலர் அலுவலகத்தில் (100, மாவ் பரீஸ் சாலை, தேனாம் பேட்டை, சென்னை-600 018) இவரையும் இவரது அரிய நண்பர் திரு. கோபாலனையும் பார்த்து அளவளாமல் திரும்புவதில்லை. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே!’ என்ற மக்கள் வாக்கில் பயிலும், அதிவீரராமபாண்டியனின் திருவாக்கிற்கு எடுத்துக் காட்டாக அமைந்தது. இவரிடம் எனக்கு ஏற்பட்ட நட்பு. குமரி மலர் அலுவலகத்திற்கு. சேல்லும்போது செட்டியாரவர்கள் சில சமயம் இருப்ப தில்லை. ஆனால் திரு கோபாலன் அவர்கள் என்னை வரவேற்ற முறைகள், அன்புடன் அளவளாவின முறைகள். முதலியவை என் உள்ளத்தை மிகவும் கவர்ந்தன. இந்த இணை பிரியாத இரு நண்பர்கள் தமிழ்ப் பண்பாட்டின் கொடுமுடிகளாகத் திகழ்ந்தனர்.இந்த இரு பெரியார்களும் இன்று (24-10-1989) இல்லை, மூன்றாண்டு இடை வெளியில் ஒருவர்பின் ஒருவராகத் திருநாடு அலங்கரிதனர். திரு வ. சுப்பையாபிள்ளை இயற்கை எய்தியபோது கேதம் விசாரிக்கச் சென்ற நானும் திரு செட்டியாரவர் களும் பவழக்காரத் தெருவில் திருபிள்ளையவர்களின் இல்லத்தில் சந்தித்ததை நினைவு கூர்கின்றேன். இருவரும் ஆளேறும் மிதிவண்டியில் நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். நான் 7-சி பேருந்து ஏறி அண்ணா நகர் வந்து சேர்ந்தேன். திரு. செட்டியார் 9-பேருந்து ஏறி தி. நகரை அடைந்தார்கள். திரு. செட்டியாரவர்கள் பாண்டி பசாருக்கு அருகிலுள்ள ஒர் இல்லத்து மாடியில் தங்கியிருந்தார்கள். சில சமயம் நான் என் சம்பந்தியின் துணிக்கடையில் இருக்கும்போது (சாரி டிலக்ஸ்) அதை யொட்டிய நடை பாதையில் அவர் மெதுவாக நடந்து செல்வதைப் பார்ப்பதுண்டு. என் கண்ணில் படும்போ 2. வெற்றி வேற்கை-34