பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. ஏ. கே. செட்டியார் 1 5 I. இது அமைந்தது. குமரிமலரில் முதன்முதலாக வெளி வந்த பாரதியின் பாஞ்சாவி சபதம் பற்றிய என் ஆய்வுக் கட்டுரை பல பெரியோர்களின் ஆசியைப் பெறக் காரணமாகவும் அமைந்தது. இக்கட்டுரையே பின்னர் விரிந்து பாரதியின் நூற்றாண்டில் நான் தெளியிட்ட நான்கு நூல்களில் ஒன்றாக பாஞ்சாலி சபதம் - ஒருநோக்கு என்ற பெயரில் நூல் வடிவம் பெற்று (மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை வெளியீடு) வெளிவந்தது, வேறு கட்டுரைகள் வேறு தொகுப்புகளில் பரவலாகச் சேர்ந்தன. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள்' என்ற தனியான நூலாகவே (மதுரை நாவலர் புத்தக வெளியீடு) வெளி வந்துள்ளது; இக்கட்டுரைகள் யாவும் குமரிமலரில் வெளி வந்தவை. விஷயதானத்திற்கு எந்தவிதமான சன் மானமும் வேண்டியதில்லை என்று திரு செட்டியார் அவர்களிடம் சொல்லிவிட்டேன், குமரிமலர் அலுவல் கத்திற்கு இலக்கியச் சுவை நுகரும் பெரிய அரசு அதிகாரிகள், நீதிபதிகள், பெரிய பெரிய எழுத்தாளர்கள் முதலிய பலர் வந்து வந்து போவதைக் கண்டிருக் கின்றேன். செட்டியார் அவர்கள் இருந்த அது ஜான்சனின் இலக்கியக் கழகம் (Literary club) போல் புகழோங்கி நின்றது. திரு. செட்டியாரவர்கள் அடக்கமான ஒரு சிறந்த காந்தியவாதி, கதரைத் தவிர வேறு ஆடை அவர் திருமேனியை அலங்கரித்ததைப் பார்த்ததில்லை. காந்தியடிக்ள் பற்றி, டாக்யுமெண்டரி படம் எடுத்த வர்கள் , அது ஏனோ புகழுடன் சிறப்பு அடையவில்லை . அருமை இராஜாஜியவர்களிடம் மிக்க பக்தியுடன் பழகுபவர்கள். நல்ல எழுத்தாளர். எதை எழுதினாலும் தெளிவாகவும் சுவைபடவும் எழுதுபவர். செய்வ திருந்தச் செய்’ என்பதற்கு திரு செட்டியாரவர்கள் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்கள். தேசியமும் தெய்விகமும் இருகண்களாகப் போற்றி வந்த பெரியார்