பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வீர. உலக ஊழியனார் ಡಿ.೩೧e உலகில் நாட்டார் என்றால் திரு. வேங்கடசாமி நாட்டார் அய்யாவைக் குறிக்கும்; நகரத்தார் என்றால் பண்டித மணி கதிரேசன் செட்டியார் அய்யாவைக் குறிக்கும், ரெட்டியார் அய்யா என்றால் பன்மொழிப்புலவர் வேங்கட ராஜுலு ரெட்டியார் அய்யா வைக் குறிக்கும். அய்யர்வாள் என்றால் தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் தான் நினைவிற்கு வருவார்கள், இலக்கணத்தாத்தா என்றால் மகா வித்துவான் மே. வீ. வேணுகோபால் பிள்ளை நினை வுக்கு வருவார்கள். நாட்டார் அய்யாவின் தலை மாணாக்கர் திரு. வீர. உலக ஊழியனார் அவர்கள். உலோகதாசன்’ என்று பெற்றோரால் இடப்பெற்ற திருநாமத்தை இப்படி மாற்றி வைத்துக்கொண்டார் என் பதை அவர் மூலமாகவே கேட்டறிந்தேன். இப்படி மாற்றி யமைத்துக் கொண்டதன் காரணம் தனித் தமிழ்ப் பற்று என்பது தான். பண்டிருந்தே தமிழ்ப்புலவர்களின் குருதி யில் ஊறியிருந்த இக்கரு பிற்காலத்தில் ஒர் இயக்கமாகவே உருப்பெற்றுத் தனித்தமிழ் இயக்கமாக வடிவெடுத்தது. இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்’ என்று தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களா? அல்லது தான் நடத்தி வந்த ஞானசாகரம்’ என்ற இதழின் பெயரை அறிவுக்