பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 69 மலரும் நினைவுகள் விளக்கம் அடைகின்றன. மக்கள் முகத்தில் அவர்கள் அநுபவித்த இலக்கியச் சுவை பிரதிபலித்ததைக் காண முடிகின்றது. கைகேயியின் அந்தப் புரம். இராமனது முடிசூட்டு விழாவைத் தெரிவித்ததற்கு நள்ளிரவில் தசரதன் வருகின்றான். அப்போது கூனியின் போதனை யால் மனம் மாறுபாடுற்று அலங்கோலத்துடன் கிடக்கும். கைகேயியைக் காண்கின்றான் அரசன். கைகேயி ஒரு காலத்தில் தனக்குத் தந்த இரண்டு வரங்களை இப்பொழுது தருமாறு வற்புறுத்துகின்றாள். ஒரு வரம் தன் மகன் பரதன் முடிசூடுவது; மற்றொரு வரம் இராமன் பதினான்கு ஆண்டு காட்டுக்குச் செல்வது. தசரதன் இதனைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போகின்றான். புண்ணில் வேற்படை புகப்பெற்ற வேழம்போல் வருந்துகின்றான். மன்னனது அந்த நிலையைக் கண்டும் கைகேயியின் மனம் சிறிதும் இளகவில்லை . மிரட்டுகின்றான்; கெஞ்சு கின்றான். மண்ணே கொள் நீ; மற்றைய தொன்றை மற’ என இரக்கின்றான். அதற்கு அவள் வையக முற்றும் நடந்த வாய்மையன்’ என்ற பெயரெடுத்த நீயே வாய்மை தவறி நடந்தால், இனி வாய்மைக்கு யார் உளர்?’ என்று பதிலிறுக்கின்றாள். மன்னன் அவளைப் பலவாறு பழித்துத் துயருறுகின்றான். நீ சொன்ன சொல் தப்பி னால் நான் உயிர் மாய்வேன்’ என்று தன் உறுதியை வெளியிடுகின்றாள். மன்னன் மூர்ச்சிக்கின்றான். கைகேயியோ தன் எண்ணம் நிறைவேறிவிட்டதென்று எண்ணி உறங்கி விடுகின்றாள். இந்தச் சூழ்நிலையைப் படிக்கும் நம்முடைய மனம் மிக இறுக்கமாகின்றது. இதனை நீக்கிக் கவிஞன் இரவு கழிகின்றது என்கின்றான். ஆவி நிறைந்துள்ள பாத்திரத்தின் மூடியைத் திறந்ததும் ஆவி நீங்குவது போல், துயரத்தால் கவியப் பெற்றிருந்த நம் மனமும் துயரத்தினின்றும் விடுதலை அடைகின்றது. இந்தக் கொடிய செயலுக்குக் காரணம் ஒரு பெண்தானே என்று, நாணினாள் என் ஏகினாள் நளிர் கங்குலாகிய