பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர. உலக ஊழியனார் 163 நளனின் மனம் போவதும் வருவதுமாக இருந்தது என்று அழகான உவமையால் காட்டுவர். இறுதியில் நளன் அவளை விட்டுப் பிரிந்தே போய் விடுகின்றான். விழித் தெழுந்த தமயந்தி படுந்துன்பத்தைச் சொற்களால் வருணித்துக்காட்ட முடியாது. எழுகின்றாள்; விழுகின் றாள்; புலம்புகின்றாள். வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல் தானும் குழலும் தனி விழ்ந்தாள்" என்று அவளது ஒரு நிலையைக் காட்டுகின்றார் புகழ்ேந்தி. அவளது பொன் போன்ற திருமேனியை அவிழ்ந்து கிடக் கும் குழல்கள் மூடி மறைக்கின்றன. இந்த நிலையில் நிலத் தில் வீழ்ந்தது, முகில் (கூந்தல்) மின்னலுடன் (மேனி) நிலத் தில் வீழ்ந்தது போல் இருந்தது என்ற உவமையால் காட்டு கின்றார். இந்த இறுக்கமான சூழ்நிலையிலிருந்து நம்மை விடுவிக்கின்றார். இரவு கழிந்து விடிந்தது என்று கூறி. கம்பன் கையாண்ட உத்தியே புகழேந்திக்கும் கை கொடுத்து உதவுகின்றது. கவிஞர் கூறுகின்றார்: தையல் துயர்க்குத் தரியாது தன்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்’ இந்தப் பாடலில் உள்ள தம் சிறகாம் கையால் வயிறலைத்து என்ற தொடரைக் கூறும்போது சேவல்கள் தம் சிறகால் வயிற்றை அறைந்து கொள்வதைத் தம் கை களால் அறைந்து காட்டுவார் ஊழியர். பாடலை இசை 7, 8. நளவெண்பா 283,