பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈够岛 மலரும் நினைவுகள் பெற்றவர்) ஆகியோரும்; ஊர்ப் பெருமக்களில் சா. கணேசன், ராய. சொக்கலிங்கம், சொ. முருகப்பா, இன்னும் சிலரும் விருந்தில் கலந்து கொண்டு சிறுவனை வாழ்த்திச் சென்றனர். அதன்பிறகு ஓரிரு தடவைகள் ஊழியனாரை என் பரிந்துரையின்பேரில் சா. க. கம்பன் திருநாளில் கலந்து கொள்ள செய்தார் என்பதாக மாதிரிப் பள்ளி ஒவிய ஆசிரியர் முனியாண்டி(ஊழியனா ரால் பரிந்துரைக்கப் பெற்றவர்) கூறிய ஒரு செய்தி நினை விற்குவருகின்றது.உலக ஊழியனார்தம்தமக்கை மகளையே மணந்து கொண்டவர். சிறு வயதில் விளையாடிக் கொண் டிருந்த போது பேசிக் கொண்டது போன்றே வா, போ' என்று திருமணமான பின்னரும் பேசிக் கொள்வார்கள். பெண் குடும்பப் பாங்குடைய பெண்ணாக அமைந்தது. ஊழியனாரின் நல்லூழேயாகும். நாமக்கல்லில் பணி யாற்றிக் கொண்டிருந்த போது அவருடைய மாத ஊதியம் ரூ.45 = க்கு மேல் இல்லை. சொற்பொழிவுகளினால் கிடைக்கும் மாத வருமானம் ரூ 15| = முதல் ரூ.20 = வரை இருக்கலாம். அக்காலத்தில் (1930 -40) ஒரு சவரன் விலை ரூ13; தான். 1940 வரை ரூ.20 = க்கு மேல் போக வில்லை என்பது நினைவு. என் திருமணத்தின் போது (1936 - 37) சவரன் விலை ரூ 20| = க்கு மேல் தாண்ட வில்லை. ஊழியனாரின் துணைவியாரிடம் ஊழியனார் மாதம் முதல் தேதியன்று ஒரு சவரன் கொண்டு போய்க் கொடுத்து விட வேண்டும். இஃது இல்லாளின் கட்டளை. அப்படியே அவரும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது தம் துணைவியாரிடம் 300 சவரன் வரையில் இருக்கும் என்று ஊழியனாரே சொன்னதாக நினைவு. நல்லொழுக்க முள்ளவர் . புகைக்கும் பழக்கம் இல்லாதவர்; பொடி போடாதவர். சில சமயம் வெற்றிலை பாக்கு போட்டு மென்று கொண்டு மகிழ்வார். அப்போது நம்மாழ்வாரிடம் எனக்குப் பழக்கம் இல்லா விடினும் இப்போது அவர் கூறிய தின்னும் வுெற்றிலை"