பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of 0. மலரும் நினைவுகள் கணவன்- மனைவி சண்டை ஓய்ந்துபோய் விட்டது. கணவன்-மனைவியின் ஊடல் விருந்து வரும்போது தீர்த்துவிடும் என்று சங்க இலக்கிய நூல்களில் படித்ததை தினைத்துக் கொண்டேன். அம்மையார் நன்கு கற்றவர் அல்லர். பண்படாத நாட்டுப்புற அன்பை அவரிடம் கண்டு மகிழ்ந்தேன். பதினைத்து ஆண்டுகட்குமுன் சேலத்தில் இவர் இல்லத்தில் கண்ட சூழ்நிலையை மீண்டும் சிதம்பரத் தில் கண்டேன். இருவர் போக்கிலும் வேறுபாடு அதிகம் காணவில்லை. அதே அன்பு நிறைந்த குடும்பம்தான். சேலத்தில் பார்த்த போது மூன்று வயதுடைய மகளைப் பார்த்தேன். அப்போது இவருக்கு மகன் இல்லை. சிதம்பரத்தில் பார்த்தபோது பத்து வயதுடைய மகன் இருந்தான். ஆடவல்லான் வேங்கடவரதன்’ என்பது இவனுடைய திருப்பெயர். ஆடவல்லான் சோழனையும் வேங்கடம் தம் ஆசிரியர் வேங்கடசாமி நாட்டாரையும் வரதன் காஞ்சி வரதராசனையும் நினைவு கூரும் வகையில் பெயரிட்டதாகக் கூறினார்ஊழியர். இப்போது மகளுக்குத் திருமணம் ஆகி இருந்தது. பெற்றோர் வீட்டிற்கு வந்திருந் தாள். அவள் முகம் சரியாக இல்லை; பேச்சும் வித்தியாச மாக இருந்தது. ஊழியரே சொன்னார். இவள் எனக்கு. ஒரே மகள். பத்தாவதுவரை படித்தவள். செல்லமாக வளர்த்தேன். சொந்தத்தில் திருமணம் புரிவித்தேன். என் போதாத காலம் இவளுக்குச் சித்தபிரமை ஏற்பட்டு விட்டது. இஃது எப்போது தீருமோ?’ என்று சொல்லிக் கண்ணிர் விட்டார். அம்மையாரும் அருகில் நின்று கொண்டிருந்தார். அவரும் இவளுக்கு இறைவன் விட்ட வழி இதுதான் போலும். தில்லைச் சிற்றம் பலவன் எங்கள் வீட்டில் இப்படி ஒரு கூத்தை நடத்துகின்றான். இந்தக் கூத்தை அந்தக் கூத்தாடிதான் நிறுத்தவேண்டும்’ என்று தாரை தரையாகக் கண்ணிர் வடித்த η ή και பையன் ஆறாவது படிக்கின்றான். இவன் படித்து ஆளாகி வயோதிக காலத்தில் எங்களைக் காக்க வேண்டும்.