பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை 179 பொருத்தி இட ஒதுக்கீட்டை குறிப்பிடுவோம். இத்தகைய விழாக்களில் மாணவர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். திரு ஈய்ங்கோய் மலையில் குடியிருந்த டாக்டர் T.S.S இராஜன் (முன்னாள் மக்கள் நலவாழ்வு அமைச்சர்) திருச்சி பிரபல வழக்குரைஞர் திரு கயிலை அனந்தர் (சோமசுந்தரம் பிள்ளை), மாவட்ட நீதிபதி (District Munsii) திரு சாரங்கபாணி, இவர்கள் தலைவராகவும், திரு மு. வ ர த ரா ச ன், திரு வே. வேங்கடராஜூலு ரெட்டியார் (பன்மொழிப் புலவர்), திரு சி. இலக்குவனார் போன்றவர்கள் சிறப்புச் சொற்பொழிவாளர்களாகவும் அமைந்த ஆண்டு விழாக்களுக்குத் திரு சுப்பிரமணியம் அவர்கள் வந்து சிறப்பித்தது, என் குடிவில் விருந்துண்டது ஆகியவை இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. நான் நாமக்கல் விழாக்களுக்குப் போகும்போது அந்த விழாக்களில் தலைமை வகித்தவர்கள், சிறப்புச் சொற் பொழிவாளர்கள், ஆகியோரை நினைவு கூர முடிய வில்லை. ஒரு மாணவன்ைத் திருத்துதல் : உயர்நிலைப் பள்ளி மேல் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களில் பெரும் பாலோர் முன்-குமரப் பருவத்தைச் (Pre-adolescent) சேர்ந்தவர்கள். இப்பருவத்தில் இனப்பெருக்க உறுப்பு களின் தொழில் விரிவடைகின்றது. அழகிலும் வனப்பிலும் கவர்ச்சியிலும் இப்பருவத்தினர் ஈடுபடுகின்றனர். சிலரிடம் எதிர்பால் கவர்ச்சியும் தோன்றுவதுண்டு. இந்நிலையில் இத்தகைய மாணவர்களிடம் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெரிய இடத்துப் பின்ளைகளிடம் மனக்கோளாறுகளும், புரட்சி மனப்பான்மையும் தோன்ற லாம். திரு சுப்பிரமணியத்தின் முன்னர் இத்தகைய பிரச்சினையுள்ள மாணாக்கன் ஒருவன் கொண்டு வரப் பெற்றான். பெண்களைப் பரிகசித்தல், கிண்டல் செய்தல் போன்ற செயல் மேட்டுக் குடியைச் சார்ந்த ஒரு மாணவ னிடம் காணப்பட்டது. இதற்கு உட்பட்ட பெண்பிள்ளை