பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி.ஆர். சுப்பிரமணிய பிள்ளை # 83 ஆணையில் என்னையும் வேற்றுாருக்கு மாற்றுவதற்கான ஆணையையும் சேர்த்து விடுங்கள்' என்று துணிவாகக் கூறவும் தனியதிகாரி செயலற்றுப் போய் வாளா திரும்பி விடுகின்றார். இப்படியும் பி. ஆர்.சுப்பிரமணியம் பள்ளி ஒழுங்கு முறையைக் காக்கின்றார். நாமக்கல் கழக உயர்நிலைப் பள்ளிக்கு மேற்புரத்தில் இருப்பது சந்தைப்பேட்டை புதுார். அப்பக்கத்திலிருந்து வரும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் பள்ளிக்கு வரவேண்டு மானால் இரண்டு ஃபர்லாங்க் சுற்றி வர வேண்டும். இவர்கள் மேற்புறமும் வடபுறமும் உள்ள சுற்றுப்புறச் சுவர்கள் சேரும் மூலையில் சுவரைச் சிறிது உடைத்து விட்டுக் கொண்டார்கள். உடைத்துவிட்ட வழியாக இவர் கள் வந்து கொண்டிருந்தனர். நகர மக்களும் இதனைத் தெரிந்து கொண்டு இதன் வழியாக வந்து இதனைப் பொது வழியாக்கிக் (Thorough-fare) கொண்டனர். பள்ளி ஒழுங்குமுறைக்கு இஃது இடையூறினை விளைவிப்ப தாக இருந்ததால் இதனை முதலில் அடைத்து விட ஏற்பாடு செய்து விட்டார் தலைமையாசிரியர். இதனால் பள்ளி ஒழுங்குமுறைக்குக் குந்தகம் விளைவிக்கும் பிரச்சினைகளில் சிறிது குறைந்தது. முதலில் இச்செயல் சிலருக்குச் சினத்தைத் துரண்டுவதாக இருந்தாலும் நாளடைவில் சரியாகி விட்டது? இராசிபுரத்திற்கு மாற்றம் : தேர்தல் முடிந்து திரு. நாச்சியப்பக்கவுண்டர் மாவட்டக் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். தமிழகத்தில் நீதி, நிர்வாகம், எதிலும் ஒழுங்கு முறை, கல்வியில் அக்கறை இவற்றில் கவனம் செலுத்துவதில் பேர் பெற்றவர் த ரு நாச்சியப்பக் கவுண்டர் . சென்னை மாநிலத்திலுள்ள மாவட்டக் கழகத் தலைவர்களில் தலை சிறந்த ஒரு சிலரில் தலைமையாகத் திகழ்ந்தவர். நாமக்கல் உயர்நிலைப் பள்ளியைவிட மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் இரண்டு மடங்கு பெரியது இராசிபுரம்