பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ஆசிரியர் பி.ஆர். சுப்பிரமணியபிள்ளை 185 அடித்ததும் எல்லோரும் வந்து விடவேண்டும்; அதற்குமேல் தலைமையான வழி மூடப்படும் என்பதைத் தெரிவித்து இப்பழக்கத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தார். முதல் மணி அடித்ததும் தலைமை வாசலின் வழியாகத் தாமதமாக வருபவர்களைத் தாமே நேராகக் கவனித்தார். இதனால் தாமதமாக வருவோர் தொகை குறைந்தது" இதனால் பவருக்குச் சிரமமாக இருந்தது; பலர் மனம் குமுறினர். - இராசிபுரத்தில் சாதிப்பேரில் சங்கங்கள், இலக்கியத் தின் பேரில் சங்கங்கள், பொதுநலம் பற்றிய சங்கங்கள், அரசியல் சங்கங்கள் முதலியவை ஐம்பதிற்கும் அதிகமாக இருந்தன. சில ஆசிரியர்கள், பெற்றோர்கள் இச்சங்கங் களைத் துண்டி முன்போலவே பல வழிகளை ஏற்படுத்தத் தீர்மானங்கள் போடச் செய்து மாவட்டக் கழகத் தலைவருக்கு அனுப்பச் செய்தனர்; பல மகஜர்கள் அனுப்பச் செய்தனர். பல சங்கங்கள் தலைமையாசிரி யரின் போக்கும் செயலும் அடாவடித்தனமானவை என்று வருணித்தன. சுவரொட்டிகள் ஒட்டச்செய்தன. இவற்றைக் கவனித்த திரு நாச்சியப்பக் கவுண்டர் பழைய நிலையே இருக்கட்டும் என ஆணை அனுப்பினார். தமது செயலில் தலையிட்டால் ஒழுங்கு முறையை ஏற்படுத்த முடியாது என்றும், தம்மை இப்பொறுப்பினின்றும் விலக்கித் தம்மை வேற்றுாருக்கு மாற்றலாகும்படி ஆணை பிறப்பிக்குமாறு கோரினார் பி. ஆர். எஸ். தலைவர் தர்மசங்கடத்திற் குள்ளானார். பிறகு தமது ஆணையை மாற்றிக் கொண் டார். ஒராண்டிற்குள் பள்ளி ஒழுங்குமுறை கட்டுக்குள் வந்தது. மாவட்டக் கழகத் தலைவரைப் பார்வையிடும்படி கடிதம் எழுதினார். தலைவரும் பள்ளிக்கு வருகை புரிந்து நிலையைக் கவனித்து மகிழ்ச்சிக்குள்ளானார். இங்ங்ணம் நன்முறையில் பணியாற்றிப் பல்லோர் புகழுரைக்குக் காரணமானார் பி. ஆர். எஸ். சேலம் மாவட்டக்கழகப் பள்ளிகளில் இவருடைய பேரும் புகழும் கொடி கட்டிப் பறந்தன.