பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮨ 8Ꮾ மலரும் நினைவுகள் நல்ல உடல்நிலைதான், எக்காரணத்தாலோ உடல் நலம் குன்றியது. இஃது அதிக உழைப்பின் காரணமாக இருக்கலாம்; பள்ளியின் ஒழுங்கு முறை என்ற பளுவை தமது மனத்தில் போட்டுக் கொண்ட காரணத்தால் மன நிலை கெட்டு அதன் காரணமாக உடல் நிலையும் கெட்டி ருக்கலாம். அப்போது நான் துறையூர்ப் பணியினின்றும் விலகி காரைக்குடிப் பணியை ஏற்றிருந்தேன். உங்கள் உழைப்பினால் உயர்ந்தீர்கள்; எனது பாராட்டுகள். உழைப்பே மனிதனை உயர்த்தும். மேலும் மேலும் உழைத்து மேன்மேலும் உயர்க’ என்று வாழ்த்துக் கடிதமும் எழுதினார். நானும் இராசிபுரம் பள்ளியைச் சீர்திருத்தம் செய்தமை கேட்டுப் பாராட்டி வாழ்த்துக் கடிதம் எழுதினேன். இவைதாம் எங்களிடையே எழுந்த கடைசிக் கடிதங்கள். சில திங்களில் பி. ஆர். எஸ். உடல்நிலை மிகவும் சீர்கெட்டது. ஒருநாள் மாரடைப்பில் காலமானார் என்ற செய்தியை நாளிதழ்களில் கண்டு கலங்கினேன். நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு (குறள்-336) என்ற குறளை நினைத்துக் கொண்டேன். சில நாட்களில் நகரப் பெருமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இவர்கள் ஒன்று கூடித் திரு சுப்பிரமணியத்தின் உழைப்பையும் பணி யையும் பாராட்டிப் பெரிய அளவில் இவரது திருவுருவப் படத்தைப் பள்ளியில் திரு நாச்சியப்பக் கவுண்டாரின் திருக்கைகளால் திறந்து வைத்த செய்தியையும் நாளிதழ். களில் கண்டு மனம் உவந்தேன். வசைமொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய' வாழ்வாரே வாழா தவர். (குறள்-240).