பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8 மலரும் நினைவுகள் சிரிப்பு, குடும்ப விளக்கில் முதல் மூன்று பகுதிகள்-இவை மட்டுமே வெளி வந்திருந்தன. இவற்றைப் படித்து இவர் கவிதைகளில் உள்ளத்தைப் பறி கொடுத்திருந்த காலம். கவிதைத் தொகுதியில் கண்ட கவிஞரின் ஒளிப் படத்தை முன்னரே பார்த்து அறிமுகப்பட்டிருந்தபடியால் என் பள்ளிக்கு எழுந்தருளிய மனிதர் பாரதிதாசனே என்பதை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. அளவற்ற பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டேன். ஏதோ காணாத பொருளைக் காண்பது போன்ற மகிழ்ச்சிப் பெருக்கு என்னை ஆட் கொண்டது. சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஆசிரியர் அறைக்கு இட்டு ஒய்வாக இருந்த ஒரு சில ஆசிரியர்கட்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என் இல்லத்தில் தயாராகி யிருந்த எளிய பகலுணவைக் கொண்ட பிறகு பள்ளியில் தலைமையாசிரியர் அறை என்ற எனக்குரிய அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து கவிஞரைக் கண்டு மகிழ்ந்தனர். அன்று மாலை மூன்றரை மணிக்கு பள்ளியில் ஒரு கூட்டத் திற்கு ஏற்பாடு செய்து அதில் கவிஞரைப் பேசுமாறு வேண்டினேன். கவிஞரும் அதற்கு இசைந்தார். பின்னர் கவிஞரை என் இல்லத்தில் ஒய்வு கொள்ளச் செய்து விட்டு என் அலுவல்களைக் கவனித்தேன். அந்தக் காலத்தில் பள்ளியிலேயே என் வீடும் அமைந்திருந்த படியால் என் குடும்பமும் பள்ளியும் ஒன்றாகவே இணைந் திருந்தன. பள்ளியும் என் குடும்பம்போல் ஆகிவிட்டது. ஒன்பதாண்டுக் காலம் பள்ளியின் வளர்ச்சியும் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடும் அநுபவமும் சேர்ந்தே பெருகி வந்தன. வழக்கம்போல் வகுப்புகட்குச் சுற்றறிக்கை மூலம்கூட்டம்பற்றிய அறிவிப்புடன் கடைத் தெரு, முதலியார் தெரு, உடையார் தெரு, தேவாங்கர் தெரு ஆகிய இடங்களிலுள்ள பிரமுகர்கட்கும் கவிஞர் வருகையைப் பற்றியும், அவர் பள்ளியில் பேசுவது