பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 £ மலரும் நினைவுகள் வதற்கு அனுமதி மறுத்தால் நாங்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதியோம்' என்று ஒருமித்த குரல்கள் எழுந்தன. பாவம், என்ன செய்வார் தலைவர்? வேறு வழியின்றி தலைவர் அனுமதிவழங்கினார். நானும் பேசினேன்’’ என்று விளக்கிய கவிஞர் தான் பேசிய விவரத்தை அற்புதமாகச் சித்திரித்து கூட்டத்தினரின் கையொவியைப் பெற்றார். கவிஞர் பேசியது: "நம் மதிப்பிற்குரிய அப்புக்குட்டிப் புலவர், வெள்ளைக்கா ரப்பணம் சின்னப் பணம் வேடிக்கை பாக்குதாம் வெள்ளிப் பணம் என்பன போன்ற இக்காலக் கவிதைகளை குறைவாக மதிப்பிட்டுப் பேசினது எனக்கு வருத்தத்தை விளைவிக் கின்றது. போகட்டும்; அவர் கருத் துப்படி இதனை வெள்ளைக் கவிதை' என்றே வைத்துக் கொள்வோம். இத்தகைய கவிதையையாவது இவருக்கு இயற்றத் தெரியுமா? அல்லது, இதன் பொருளையாவது இவரால் உணர முடியுமா? அல்லது, இவரால் பிறர்க்கு இதன் பொருளை உணர்த்தத்தான் தெரியுமா? சின்னப்பணம்’ என்பது சிறிய பணம்’ அல்ல. பழைய ஒரு தம்படி அளவு உள்ள வெள்ளிப் பணம்’ என்பதே இவர் பேசிய 'தொனி’யினாலே இவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 'ஏழாம் எட்வர்ட் சின்னம் பொறித்த ஒரு ரூபாய், அரை ரூபாய், கால் ரூபாய், அரைக் கால்ரூபாய் (பழைய இரண்டனா) இவை யாவும் சுத்தமான வெள்ளியா லானவை. இவற்றை உருக்கி வெள்ளி உலோகமாக் கினால் இவற்றின் மதிப்பு பாதியாகிவிடும். வெள்ளியும் உயர்தரமான வெள்ளியாகும். வெள்ளைக்காரனின் சின்னம் பொறித்திருப்பதால் இதன் மதிப்பு இரண்டு மடங்கு ஆகிறது. இந்தப் பொருளை இனியாவது இப் புலவர் போன்ற தலைக்கணம் உள்ளவர்கள் தெரிந்து, கொள்ளட்டும். '