பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 & மலரும் நினைவுகள் இந்தக் கற்பனையை நான் இளைஞர் வானொலி" (1962) இளைஞர் தொலைக்காட்சி (1966) இவை பற்றி சிறுவர்கட்கு நூல் எழுதும் போது வானொலிக்கு முதல் மூலிகையையும் தொலைகாட்சிக்கு இரண்டாவது மூலிகையையும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம் என்று விளக்கியுள்ளேன். கவிஞரின் புரட்சிக் கவி' என்ற சிறு காவியத்தில் நிலவைப் பற்றி உதாரன் கூறுவனவாக வந்துள்ள, நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ! வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான் சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுதஊற்றோ? காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாரிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்? சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றே இயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந் தானோ? என்ற இரண்டு பாடல்கள் கற்பனையின் கொடுமுடியை எட்டியனவாக என் மனத்திற்குப் பட்டன. இப்படி எத்தனையோ பாடல்கள் இத்தொகுதி என் உள்ளத்தைக் கவர்ந்தன. "அழகின் சிரிப்பு’ என்ற நூலில் எல்லாப் பாடல்களும் இயற்கையின் எழிலைக் காட்டுகின்றன. ஒவ்வொன்றும்