பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் பாரதிதாசன் 20.3 புதுவைப் பல்கலைக் கழகப் பணியாக மும்முறை புதுச் சேரிக்குச் சென்றிருந்தேன். அப்போது என் அரிய நண்பர் திரு. அருணகிரி (செயலர், புதுச்சேரிக் கம்பன் கழகம்) புதுச் சேரியில் பல இடங்களைக் காட்டிச் செல்லும்போது பாரதியார், பாரதிதாசன் நினைவு இல்லங்கட்கும் இட்டுச் சென்றார். பாரதிதாசன் நினைவு இல்லத் தில் கவிஞரின் புதல்வி பணியாற்றிக் கொண்டிருக் கின்றார். அவர்களோடு உரையாடி மகிழ்ந்தோம். 口 I D இவருடைய சிறு பாட்டுகளில் சில நல்ல கவர்ச்சியைப் பெற்றுள்ளன. அவற்றில் கற்பனை அழகும் ஒசையின்பமும் ததும்பி நிற்கின்றன. கருத்துப்பான்மைக்கும் இலட்சியப் பொலிவுக்கும் முக்கியத்துவம் உள்ளதேயன்றி வெறும் இலக்கியச் சுவைக்கும், பரம்பரை யாகப் புலவர்கள் கையாளும் ஏட்டுக் கற்பனைக்கும், இலக்கு இல்லாத உணர்ச்சிக்கும் முக்கியத்துவம் இல்லை. இந்தக் கூறு பாவேந்தரின் கவிதைக்குள்ள கவனிக்கத் தக்க தனிப் பண்பாகும். இவருடைய காதல் பாட்டுகளில் சில கனிந்த உணர்ச்சி ஒவியங்களாகத் திகழ்கின்றன. ஆனால் பல பாடல்களின் சுவையையும் கவிதை எழிலையும் பிரசார ஆவேசம் மங்க வைத்துள்ளது எனலாம். உலகம் தோன் றின நாள் முதல் பெருங் கவிஞர்கள் போற்றி வந்த காதல் தத்துவத்தின் அகண்ட தன்மையும் தெய்விக மாட்சியும் இவர் கவிதைகளில் காண முடியவில்லை. தற்கால நடைமுறையிலுள்ள பல பொருள்களைப் பற்றிப் பாடப் பெற்ற விடுபாட்டுகள்-தனிப் பாடல்கள் சுவையுடன் மிளிர்கின்றன. தமிழ் மொழிபற்றிய சில பாடல்களின் அடிகள்; உலகப்பன் பாட்டில் சில அடிகள், தாலாட்டும் பாடல்களில் சில கண்ணிகள், தமிழ் நாட்டில் சினிமா, புத்தக சாலை, பத்திரிகை இவற்றில் சில பாடல் களின் அடிகள் படிப்போரின் மனத்தில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டேயிருக்கும். இந்த அநுபவம் எனக்கும் உண்டு.