பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் 207 ஆசிரியர்களும் திரு பாண்டியனாரின் பேச்சினைச் செவி மடுக்கத் தயாராக இருந்தனர். துறையூர் கூட்டத்திற்கு செய்திருந்த ஏற்பாடு திரு பாண்டியனாருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. கவிதை இன்பம்’ என்ற தலைப்பில் மிக அற்புதமாகப் பேசினார். என் ஐந்து வருடப் பயிற்சியினால் துறையூர் கூட்டம் நன்கு சுவைக்கும் பழக்கம் பெற்றிருந்தது. ஊர்ப்பெரு மக்களும் ஓர் இருபது பேருக்குக் குறையாமல் வந்திருந்தது. திரு பாண்டியனாருக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. சுவையாக அமைந்த இந்தப் பேச்சில் குறிப்பிட்ட சிந்தாமணி பாடல் ஒன்றின் விளக்கமும் கம்பராமாயணப் பாடல் ஒன்றின் விளக்கமும் இங்கு மலரும் நினைவாக வெளிவருகின்றது. சிந்தாமணியில்:திரு பாண்டியனார்பேச்சு. அக்காலத் தில் தமிழகம் மிக்க வளம் பெற்றிருந்தது. பல பாவலர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஏராளமான பாக்களைப் பாடி மக்களுக்குச் செவியுணவு நல்கி வந்தனர். தமிழர்களது வாழ்க்கைக்கு உயிராக இருந்த தமிழ் மொழி யும் இவர்களால் வளம் பெற்றது. பொதுவாகப் பாவலர் களைக் கற்பனைக் களஞ்சியம்’ என்று சொல்லலாம். இழிந்த உலோகங்களையும் உயர்ந்த பொன்னாக்கும் இரதவாதிகள் போன்றவர்கள் இவர்கள். பொது மக்களின் எண்ணங்களையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். இத்தகைய சிறந்த பாவலர் களுள் திருத்தக்கதேவர் என்பவர் ஒருவர். சீவகசிந்தாமணி யைப்படைத்து அதனைத் தமிழ்த் தாய்க்குக் காணிக்கை யாகத் தந்துபெருமை படுத்தியவர்' ஒருநாள் தேவர் ஒருவயல் வழியாகச் செல்ல நேர்ந்தது. மருத நிலத்தில் வாழும் மக்கள் நல்ல மாடு களை வைத்திருப்பர் என்பதை நாம் அறிவோம். பாவலர் சென்ற வயலுக்குரியவன் இரண்டு காளைகளைச் சோடி