பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器夏奥 மலரும் நினைவுகள் அப்படியும் அமைத்துக் கூறவில்லை. இரண்டு காளை களும் ஒத்த பருவங்களுடையன. இவ்வுவமையைக் கொண் டால் பருவ வேறுபாடு என்ற குற்றம் நிகழும். ஆகவே அந்த உவமையையும் நீக்கி விட்டார்’’ "வெவ்வேறு இடங்களில் பிடித்து வந்த காளைகள் அன்புடன் ஒன்றுபட்டிருக்கும் நிலை வெவ்வேறு இடங் களிலிருந்தவர்கள் பெண் கொண்டதால் புதிய அன்புடன் பொருந்தியிருக்கும் நிலைதான் பொருந்தும். இவ்வாறு ஆழ்ந்த சிந்தனையுடன் அமைத்த செய்யுள் நமது உள்ளத் தைக் கொள்ளை கொள்ளுகின்றதன்றோ?' என்று கூறி தமது நுண்மாண் நுழைபுலத்தையே காட்டிக் கூடியிருந் தோரின் மதிப்பைப் பெற்றார் திரு பாண்டியனார். கம்பராமாயணத்தில் : கம்பராமாயணத்தில் ஒரு பாடலைக் காட்டி அதன் விளக்கம் தரும்போது புலமை யின் கொடு முடியிலிருந்த ஒரு புலவர் பெருமானைக் காண முடிந்தது. ' கவிநாயகனான அநுமனைக் கவிக்கு நாயகனான கம்பன் ஆணியாய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்" என்று சிறப்பிப்பான், அறம் என்ற பொருள் தழைப்பதற்கு அநுமனே முதற்காரணன் என்பது கவிஞனின் குறிப்பு. இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க அஞ்சனைக் குமாரனைக் கம்பநாடன் பல அழகிய சொற்றொடர்களால் சிறப்பித்துப் பாராட்டுவான். கிட்கிந்தா காண்டம் மராமரப் படலத்திலிருந்து காவியம் நிறைவு பெறும் வரையிலும் கவிநாயகனது சிறப்பைக் கவிக்கு நாயகன் ஆங்காங்குக் குறிப்பிட்டுச் சொல்லு கின்றான். செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்" SAASA SAAAAAMMAAASAAAS 2. சுந்தர. ஊர்தேடு-132