பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔翼别 மலரும் நினைவுகள் செய்கின்றான். அவர்கள் உறங்கவே, சீதாப் பிராட்டி, சந்திரனையும் இரவையும் இருளையும் பூங்கொடிகளையும் பலவாறு விளித்துப் புலம்புகின்றாள். சென்ற நிகழ்ச்சி களையெல்லாம் மனத்திற்குக் கொண்டு வந்து அசை போடுகின்றாள். நஞ்சனையான் அகம் புகுந்தமைக்கு தைந்து நைந்து மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு என மயங்குகின்றாள். பொறையிருந் தாற்றியென் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவன் காணும் ஆசையால்’ (பொறை-பொறுமை; அறை - ஒலிக்கின்ற1 என்று பேசுகின்றாள். இராமன் தன்னை மீட்டபிறகு, 'இற்புகத் தக்கவள் அல்லை’ என்று கூறினால் தன் கற்பு நிலையை எங்ஙனம் காட்டி மெய்ப்பிப்பது என ஏங்கு கின்றாள். ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறெனச் சாதல்காப் பவரும்என் தவத்தின் சாம்பினார் ஈதலாது இடமும்வேறு இல்லை என் று)ஒரு போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள்* (ஆறு-வழி: தவம்-நல்வினை; சாம்பினார்-உறங் கினார்; பொதும்பர்-தோப்பு) இங்ங்ணம் பிராட்டி தன்னை முடித்துக் கொள்ள முயலும் தருணத்தில் இராமநாமத்தைச் சொல்லித் தன்னை அண்டர் நாயகன் தூதன் என்று கூறி அவளது செயலைத் தடுத்து நிறுத்துகின்றான் அதுமன். இங்கனம் அதுமன் 3. சுந்தா. உருக்காட்டு-11 4. டிெ டிெ-21