பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零器載 மலரும் நினைவுகள் வந்து போகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. சென்னைக்கு வரும் போதெல்லாம் சில சமயம் டாக்டர் மு. வ. வைக் கல்லூரியில் சந்தித்து அளவளாவுவதுண்டு. இக்காலத்தில் செனாய்நகர் செல்லம்மாள் தெருவிலுள்ள அவர் சொந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அங்குச் சந்தித்த போது 'கயமை’ என்ற புதினத்தை எனக்கு அன்பளிப்பாக வழங் கினார். தமிழ்ப் பேராசிரியர்களில் இக்காலத்திற்கேற்ற புதினங்களைப் படைத்து வழங்கிய முதல் பேராசிரியர் இவர். இக்காலத்தில் குமரிமலர்' என்ற திங்கள் இதழில், இலக்கியம், சமயம், ஆராய்ச்சி மொழி வரலாறு போன்ற துறைகளில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. நானும் மு. வ. அவர்களின் புதினங்களை ஆவலுடன் படித்து வந்த காலம் அது. குமரி மலரில் வெளியிட்ட தமிழில் புதினங்களின் வளர்ச்சி’ என்ற கட்டுரையில் மு. வ. வின் சில புதினங்களைக் குறிப் பிட்டு விளக்கியுள்ளேன். டாக்டர் மு. வ. போல் கடமையைக் கருத்துடன் ஆற்றி வருபவர்கள் ஒரு சிலரே. தாம் முதுகலை வகுப் பிற்குக் கற்பித்த அதுபவத்தைக் கொண்டு இலக்கிய ஆராய்ச்சி', 'இலக்கியத் திறன்' , 'இலக்கிய மரபு' போன்ற திறனாய்வு நூல்களையும், மொழியியல் , மொழி வரலாறு போன்ற மொழிபற்றிய நூல்களையும் முதன் முதலாகப் படைத்து வழங்கியவர். எத்தனையோ ஆங்கில நூல்களைப் படித்து இந்த நூல்களை உருவாக்கிய விவரங் களை அந்தந்த நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள மேற் கோள் நூல்களின் பட்டியலிலிருந்து அறிந்து கொள்ள லாம். இத்தகைய சிரமத்தை பின் வந்தோர் மேற்கொள்ள வில்லை; முதுகலை மாணவர்களும் ஆங்கில நூல்களைக் கண்னெடுத்தும் பாராது மு. வ. வின் நூல்களின் துணை கொண்டே தேர்வுகள் எழுதுகின்றனர். இதனால் இத்துறைகளில் புதிய நூல்கள் தோன்றுவதில் ஒரு தேக்கம் நிலவுகின்றது. நானும் இவருடைய வழியைப் பின்பற்றிக்