பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意盛乱 மலரும் நினைவுகள் கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். எனக்குப் பாடத் திட்டக் குழுவின் தலைவர் பதவி கிடைக்கும் வரை அவரைத் தலைவராக இருக்கு. மாறு வேண்டினேன். பல்கலைக் கழகத்திலும் உரியவர் களைக் கண்டு பேசி இதற்கு ஆவன செய்து வந்தேன். டாக்டர் மு. வ. சொன்னார். டாக்டர் ரெட்டியார், உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன். என் தாத்தா வின் பெயர் வரதராசன்' என்பது; அவரை நினைவு கரும் பொருட்டு எனக்கும் வரதராசன்” என்ற பெயர் சூட்டப் பெற்றது. குழப்பம் நேராதிருக்கும் பொருட்டும், ஒரு மரியாதைக்காகவும் என்னை வரதராசன்’ என்று அழைக்காமல் 'திருவேங்கடம்' என்றே அழைத்து வந்தார் ன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் "திருவேங்கடம்’ என்ற பெயரும் தொடர்ந்து என் மனத் தில் இருக்கும் என்று உணர்ச்சி பொங்கக் கூறியது (1962) இன்றும் (1989) என் நினையில் பசுமையாகவே உள்ளது. 1974-இல் அவர் திருநாடு அலங்கரிக்கும் வரை திருவேங்கடவன் பல்கலைக் கழகத்துடன் ஏதோ ஒரு வகையில்-எல்லா வகையிலும் என்று கூடத் சொல்லலாம் -அவருடைய தொடர்பு இருந்து கொண்டே இந்தது. 1984-இல் முத்தொள்ளாயிர விளக்கம்’ என்ற ஒரு நூல் எழுதினேன். அதைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவரச் செய்ய முயன்றேன். அப்போது துணைவேந்த ராக இருந்த திரு. எஸ். கோவிந்த ராஜூலு நாயுடு அவர் கள் இதன் படியை வல்லுநர் கருத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு பாடத் திட்டக் குழுவின் தலைவ ராக இருந்த டாக்டர் மு. வ.விற்கு அனுப்பி இந்த நூலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளியிடத் தகுதி உண்டா?' என்ற கருத்தைக் கேட்க, டாக்டர் மு. வ. வும் 'இது சிறந்த நூல். உரை சாதாரண மக்கள் அறிவதற்கும் கவிதைச் சுவையை அநுபவிப்பதற்கும் ஏற்றதாக உள்ளது. ஆகவே இதனைப் பல்கலைக் கழகம் வெளியிடுவதில்