பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் あ27 தவிர, டாக்டர் மு.வ. விற்கு ஆகூழும் துணை நின்றது என்பதை நாம் மறத்தற்கில்லை. இந்த ஊழ் செயல் பட்டால் வருவது தானே வரும். இவ்விடத்தில், நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும் மேன்மேல் உயர்த்து நீறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான்." என்ற சமண முனிவரின் திருவாக்கை நினைத்தல் தகும். டாக்டர் மு.வ. தற்காலிகமாக இருந்து வந்த பல்கலைக்கழகப் பணியைத் துறந்தார்; நம்மால் முடியுமா? முடியாது. நாற்காலிக்கு அலங்கார புருஷர்களாக அப்படியே ஒட்டிக் கொள்வோம். கிடைத்தற்கரிய பேறு என்று கருதி அப்படியே இருந்து கொள்வோம். நம்மிடம் தான் முயற்சி இருக்கவேண்டிய முறையில் இல்லையே; கடின உழைப்பும் இல்லையே. இவை இரண்டும் இல்லை யெனில் தன்னம்பிக்கைக்கும் இடம் ஏது? திரும்பவும் பச்சையப்பன் கல்லூரிக்கு வந்த பிறகு பல புதினங்களை அணிஅணியாக வெளியிட்டார், பொது மக்களுக்கும் அறிமுகம் செய்யும் போக்கில் பல இலக்கிய நூல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன. எங்கும் மு.வ. வின் புகழ் பரவியது. இந்நிலையில் தி.மு.க. ஆட்சியும் வந்தது. அமைச்சர்களில் ஒருவர் பணித்தோழர்; மற்றவர் மிகவும் நெருங்கிய நண்பர். எந்தவித முயற்சியுமின்றி மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி தானா கவே இவரை வந்தடைந்தது. இவ்விடத்தில், ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு, ஒன்றாகும்: அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனைஆளும் ஈசன் செயல்.’ 1. நாலடியார்-248 (அறிவுடைமை) 2. நல்வழி-27,