பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடாக்டர் மு. வரதராசனார் . 2教き9 றிருந்த இடம் சோலையாக மாறி விட்டது. இயற்கை யழகை நக்கீரர் பெருமான் கை புனைத்தியற்றாக் கவின் பெறுவனப்பு" என்று வருணிப்பார். டாக்டர் மு. வ. பல்கலை வளாகத்தைக் கைபுனைந்தியற்றிய கவின் பெறு வனப்பாக்கினார். . பல்கலைக் கழகத்தில் பல்வேறு கட்டடங்கள் இவர் காலத்தில் எழும்பின.இவை தவிர அஞ்சல் வழிக் கல்விமுறையை முதன் முதலாகத் தமிழகத் தில் தொடங்கின. பெருமை இவரைச் சாரும். இஃது பெரும் புகழுடன் திகழ்கின்றது. இத்திட்டத்தால் பெறும் வருவாய் சுய தேவையை நிறைவேறச் செய்வதுடன் எஞ்சிய தொகை (பல இலட்சரூபாய்) பல்கலைக் கழகக் கருவூலத்தையும் சென்றடைகின்றது. இத்திட்டத்தால் கிடைக்கக்கூடிய வருவாயைக் கொண்டேபல கட்டடங்கள் எழும்பியுள்ளன; பல்வேறு தளவாடப் பொருள்கள் இந்த வருவாயைக் கொண்டே வாங்கப் பெற்றுள்ளன. இப் பல்கலைக் கழகத்தில் இது மிகவும் சிறப்புடனும் செல்வாக் குடனும் செயற்பட்டு வருகின்றது. கல்லூரி ஆசிரியர்கட்கு மூதறிஞர் குழுக்கள் அமைத்து முதன் முதலாக ஆய்வு முறையைத் தோற்றுவித்து பிஎச். டி பட்டம் பெறக் கல்லூரி ஆசிரியர்கட்கு வசதி செய்து தந்த பெருமை டாக்டர் மு. வ. வைச் சாரும். இத்திட்டத்தால் பலர் டாக்டர் பட்டம் பெற்றனர். இவர் வழியைப் பின்பற்றியே சென்னைப் பல்கலைக் கழகமும் இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தது. இங்ங்னம் பல்வேறு ஆக்கத் திட்டங்களை நடைமுறைக்குக் கொணர்ந்து பெரும் புகழ் பெற்றார். தமிழக அரசும் இவரைப் பாராட்டியது. பாராட்டின் அறிகுறியாக அடுத்த மூன்றாண்டுக்குத்துணைவேந்தராக நியமனமும் செய்தது. ஆனால் தமிழகம் இவர் தொண் டினைப் பெறும் பேற்றை இழந்தது. நான் திருப்பதியில் பணியாற்றிய பொழுது மின்னாது இடித்தது போன்று இவர் மறைவுச் செய்தி (10.10-1974)