பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠢蠢母 மலரும் நினைவுகள் எட்டியது. சென்னையில்தான் இவர் திருநாடு அலங்கரித் தார். திரு. பொன் செளரிராசனது விடுப்புக்கடிதத்தால் இத் துக்கச் செய்தியை அறிவித்திருந்தார். செய்தி தாமத. மாகத் தெரிந்ததால் ஈமச் சடங்கில் நான் கலந்து கொள்ள இயலாது போய் விட்டது. பத்தாம் நாள் சடங்கில் கலந்து கொண்டேன். இந்தச் சூழ்நிலை பக்திச் சூழ்நிலையாக மாறியிருந்தது. ஈமச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத வெளியூர் அன்பர்கள் திரண்டிருந்தனர். தாயுமானவர் பற்றி இவர் வானொலியில் பேசிய ஒரு மணி நேரப் பேச் சினைப் பதிவு செய்து வைக்கப் பெற்றிருந்தது. அந்தப் பேச்சினை இப்போது வந்திருந்த அனைவருக்கும் கேட்கும் வாய்ப்பு இருந்தது. டாக்டர் மு. வ. மறைந்த நிகழ்ச்சி போனது போன்ற ஒரு மயக்கம். அவரே இப்போது நேரில் உரையாற்றுவது போன்ற மற்றொரு மயக்கம். தேவார, திருவாசகங்கள் ஒதப்பெற்றன. மறைந்த ஆன்மாவின் நினைவாக-பிதிர்க்கடனாகஅனைவருக்கும் பெரு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. சென்னை வருவதற்கு முதல் நாளே, என் உடல்நிலை சற்றுச் சீர் கெட்டிருந்தது. இந்த நிலையில் நகரி தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்துப்பேசினேன். சென்னைக்கு வந்த போதும் உடல் நிலை நன்றாக இல்லை. விருந்து உணவு என் உடல் நிலைக்கு ஏற்றதாக இல்லை; பசியும் இல்லை. கத்தரிக் காய்க் கூட்டு மிகச் சுவையாக இருந்தது. பாயசம், சிறிது மோர்சோறு மட்டிலும் தான் உண்டேன். சுவை மிக்க கத்தரிக்காய்க் கூட்டைச் சற்று அதிகமாகவே உண்டேன். அன்றுமாலையே திருப்ப திதிரும்பி விட்டேன். மறுநாள் வயிற்றுப் போக்கு சிறிது இருந்தது. வரவர அது அதிகப்பட்டது. வெறும் நீராகவேபோயிற்று. வாந்தி பேதி (Cholera) யாக இருக்குமோ என்று ஐயப்பட்டேன், நாடி இறங்கிக்கொண்டே வந்தது. பல்கலைக் கழக நலவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றேன். ஊசி மருந்து, மாத்திரை-எதற்கும் கேட்கவில்லை. நாளுக்கு நாள் பேதி,