பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

经盛郡 மலரும் நினைவுகள் களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். அவர்கட்கு ஒல்லும் வகையெல்லாம் உதவினார். எங்கள் கல்லூரி ஆசிரியர்கள் ஒரு சிலருக்கு ஆதரவாளர்கள் (God-fathers) இருந்தமையால் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுப் பணி பெற்றனர். பலமுறை துணைவேந்தரைப் பார்த்துப் பேசியும் இப்பதவி எனக்குக் கிடைக்கவில்லை.ஒரு மூன்றாண்டுகள் (1953-56) பல்கலைக் கழகப் பேரவை யிலும் கல்வி ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றிருந்தேன்.இந்த அவைகளின் கூட்டங் களுக்காகப் பன்னிரண்டு முறை சென்னைசெல்லும் வாய்ப் புகள் இருந்தன. இவற்றைத் தவிர மூன்று முறைசொந்த அலுவலாகச் சென்னை செல்லும் வாய்ப்புகள் இருந்தன. பதினைந்து முறை பார்த்து வேண்டியும் துணைவேந்தர் ஏ.எல். முதலியாரின் உதவி பெறமுடியவில்லை. பல்வேறு மழுப்பல்கள்தாம் அவரிடம் பெற்ற உதவிகள்! பேராசிரியர் இராகவனை (ஆட்சிக் குழு உறுப்பினர்) அணுகியதால் ஒர் ஐந்தாண்டுகள் வித்துவான் தேர்வில் விடையேடுகள் திருத்தும் பணி கிடைத்தது. காரைக்குடி யில் இருந்தபோது (1953, 1959, 1969 ஆண்டுகள்) மூன்று ஆண்டுகளும், திருப்பதி சென்றபிறகு இரண்டு ஆண்டுகளும் (1961, 1962 ஆண்டுகள்) இப்பணி தொடர்ந்து நீடித்தது. திருப்பதியிலிருந்தபொழுது தொடர்ந்து ஆறு ஆண்டு கள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவர் தாமரைச்செல்வர் திரு நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள். இவர் காலத்தில் இவரால் பயன் அடைந்தவர் கள் எண்ணற்ற மாணவர்கள்; எண்ணற்ற ஆசிரியர்களுள் அடியேனும் ஒருவன். ஐந்தாண்டுகள் எம்.ஏ. தேர்வில் பணி தல்கினார். வறுமையால் தொல்லையுற்ற அடியேனுக்கு இந்த உதவி காலத்தினால் செய்த உதவி யாகும். இதனை என் வாழ்வில் ஞாலத்தினும் பெரியதாகக் கருதி வருகின்றேன்.