பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

훈 மலரும் நினைவுகள் பேராசிரியர்கள் என்னை சென்னைப் பல்கலைக் கழகக் கல்வி ஆலோசனைக் குழு (Academic Council) உறுப்பினனாகத் தேர்ந்தெடுத்தார் கள். பல்கலைக் கழகத்தின் கீழிருந்த கல்லூரிகளின் இந்தக் குழு உறுப்பினர்களிடையே நடை பெற்ற பேரவை (Senate)த் தேர்தலிலும் நான் வெற்றி பெற்றுப் பேரவை யின் உறுப்பினனானேன். மூன்றாண்டுக் காலம் உறுப்பினர் பதவி நீடித்தது. இச்செய்தியும் பிள்ளையவர்கட்கு எட்டியது; ஆசிரியர் சமூகத்தினிடையே எனக்குரிய செல்வாக்கும் பிள்ளையவர்களின் கவனத்தைக் கவர்ந் தது . 1958-கோடைவிடுமுறை என நினைக்கின்றேன். பிள்ளையவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது புகுமுக வகுப்பில் அறிவியல் பாடங்களைத் தமிழில் கற்பிக்கும் வகை முறை களைப்பற்றி ஆராய ஒர் ஆறு வாரக் கருத்தரங்கு நடத்தத் தீர்மானித்து என்னை வகைதுறைவள வல்லு நராக(Resource Person) நியமித்தார்கள். பல்கலைக் கழகத்தில் புகுமுக வகுப்பில் (Pre-university Class) அறிவியல் பாடங்கள் (இயற்பியல், வேதியியல், தாவர இயல், விலங்கியல். நிலஉட்கூற்றியல்) கற்பிக்கும் ஆசிரியர் களும் நானும் சேர்ந்து வகைமுறைகளை ஆராயவேண்டும் என்பது திட்டம், நாங்கள் (1) கலைச் சொல்லாக்கம், (2) பாடங்களில் மாதிரி வகுப்புகள் எடுத்தல் என்ற இரண்டு திசையில் எங்கள் கருத்தரங்கை நடத்திவந்தோம். இந்த முறைகளை நான் இங்கு விவரிப்பது மற்றொன்று விரித்தலில் கொண்டு செலுத்திவிடும். எனக்குப் பல்கலைக் கழக விருந்தினார் விடுதியில் உண்டி உறையுள் இவற்றிற்கு ஏற்பாடாகி இருந்தது. திரு. பிள்ளையவர்கள் நாடோறும் காலைச் சிற்றுண்டிக் குப் பிறகு சுமார் 8.30க்கு தம் இல்லத்திற்கு வந்து தம்மிடம் அளவிளாவிக் கொண்டிருக்குமாறு பணித்தார்.