பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 25五 இவர்தம் இனிய குரலில் கேட்டு மகிழ வேண்டும் என்ற ஆசை எவரையும் விட்டு வைக்காது. பிறவியிலே வைணவராயினும் சில வைணவர்கள் பேச்சில் மணிப் பிரவாள நடையும் தமிழ் நடையும் கலந்து கிராம ஃபோன் பிளேட்டில் செய்தி வெளிவருவதுபோல் இல்லாமல் இவர் வாக்கில் தூயதமிழில் வைணவ நடையும் தமிழ் மணமும் கமழ இனிய குரலில் வெளிவரும்போது குளிர்ந்த பழச்சாறு பருகினது போன்ற அநுபவம் கேட் போரிடம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, கொழுந்து அலரும் மலர்ச்சோலைக் குழாய்கொள் பொய்கைக் கோள்முதலை வாள்.எயிற்றுக் கொண்டற்கு எள்கி அழுந்தியமா களிற்றினுக்கு அன்றுஆழி ஏந்தி. அந்தரமே வரத்தோன்றி அருள்செய் தானை, எழுந்தமலர்க் கருநீலம் இருந்தில் காட்ட, இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட, செழுந்தடநீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவ லூர் அதனுள் கண்டேன் நானே." என்ற திருமங்கையாழ்வாரின் திருக்கோவலூர் பற்றிய பாகரத்தை எடுத்து விளக்கும்போது நம்மைத் திருக் கோவலூருக்கே கொண்டுபோய் விடுவார். அங்குள்ள இயற்கை எழிலை அற்புதமாக விளக்குவார். நமது மனத் தில் அக்காட்சி திரைக் காட்சி காண்பது போன்ற அநுபவத்தை ஏற்படுத்தி விடுவார். கசேந்திராழ்வான் கதையை எடுத்து விளக்கும்போது நாம் கசேந்திரன் என்ற யானை முதலை வாயில் சிக்கித் தடுமாறுவதையும் திருமால் மலர்மகளும் மண்மகளும் இருபாலும் விளங்க கருடன் மீது வருவதையும் நாம் நேரில் காண்பது போன்றி ஒருவித பிரமையை-மயக்கத்தை-ஏற்படுத்தி விடுவார். நாமும். கவிதையதுபவத்தின் கொடுமுடியில் நின்று. 4. பெரி. திரு.2.16:8