பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

獻醬麗 மலரும் நினைவுகள் பக்தியதுபவத்தை மாந்தும் நிலையை ஏற்படுத்தி விடுவார். ஒரு முறை இவர் பேச்சைக் கேட்போர் மேலும் மேலும் கேட்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் திலையை ஏற்படுத்தி விடுவார் கேட்போரிடையே. ஒரு சமயம் பேராசிரியர் இராகவன் காரைக்குடிக் கம்பன் திருநாளில் சீதாப்பிராட்டி என்னும் பாத்திரப் படைப்பைப் பற்றிப் பேசியதாக நினைவு. அப்பொழுது அவர் சில பாடல்களை எடுத்துகாட்டிக் கல்கத்தா ரசகுல்லா'வைச் சுவைப்பதுபோல் அப்பாடல்களைச் சுவைக்க வைத்தது நினைவுக்கு வருகின்றது. சீதாப் பிராட்டி இலங்கையில் இருந்த சூழ்நிலையை, வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒரு சார் விண்தோய் காலையும் மாலை தானும் இல்லதோர் கனகக் கற்பச் சோலையங் கதனுள் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையின் இருந்தாள் ஐய! தவம்செய்த தவமாம் தையல்.’ என்று அதுமன் வாக்குவில் காட்டுவார் பேராசிரியர், "இலங்கையில் ஒருபக்கத்தில் இராவணன் விரும்பும் போது உல்லாசமாய்க் காலங் கழிக்க ஓர் இடத்தை அமைத்துக் கொண்டிருந்தான். அஃது அழகான சோலை; எது காலை? எது மாலை? என்று தெரியாத இடம். பகலவன் பிரவேசிக்காத இடம். அந்தச் சோலையில் தான் கற்பினுக்கு அணியான பிராட்டியைக் கண்டேன். எப்படிக் கண்டேன் தெரியுமா? கோதாவரி தீாத்தில் பஞ்சவடி என்றும் சோலையில் நின் தம்பி இலக்குவன் புல்லினால் அமைத்த பர்ண சாலையில் இருந்தாள். எப்படி இருந் 5. சுந்த திருவடி தொழுத-64