பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 மலரும் நினைவுகள் ஒரு காவிய மாந்தரை உயர்ந்த இடத்தில் ஏற்றி வைக்கின்ற கலை ஓர் அரிய கலை; அற்புதமான கலை. இந்த அரிய கலையைக் கம்பனது படைப்புத் தத்துவம் பாங்குற எடுத்துக் காட்டுகின்றது. சிம்மாசனத்திற் கெல்லாம் மேலான சிம்மாசனம் ஒன்றைச் சீதாப் பிராட்டிக்குக் கவிநாயகன் கம்பன் அமைத்து வைக்கின் றான். இது பெண்மையைக் கண்ணுக்கும் எட்டாத ஆசனத்தில் வைத்ததாகும். இராவணனை ஒரு துரும்பாக மதித்துப் பிராட்டி பேசினதை மறைந்து நின்று கேட்ட மாருதிக்கு உண்டான வியப்புக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் எட்டாத ஒர் அற்புத உலகிலிருந்து இலட்சியமும் ஆங்காரமும் இறங்கி வித்து முழக்கம் செய்கின்ற மாதிரி மாருதிக்குத் தோன்று கின்றது. பிராட்டியின் மனப்பண்பு அவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளது. இலங்கையினின்றும் திரும்பி வந்த மாருதி இராமனிடம் பேசுகின்றான். இந்த நிகழ்ச்சியைச் சித்திரித்துக் காட்டும் கம்ப தாடரிைன் இரண்டு பாடல்களை விளக்குகின்றார் பேராசிரியர் இராகவன். சோகத்தால் ஆய நங்கை கற்பினால் தொழுதற் கொத்த மாகத்தார் தேவி மாரும் வான் சிறப் புற்றார்: வாழ்க்கை இலட்சியங்களில் மகளிர்க்கே உரிய உறுதிப் பாட்டின் ஆற்றல்-அதாவது கற்பின் ஆற்றல்- எவ்வளவு தொலைவு போகும் என்பதை வியந்து கூறுகின்றான் அநுமன் . நான்முகனின் நாயகி நாமகள், பகலவனின் தர்மபத்தினி சாயாதேவி, இந்திரனின் துணைவி இந்திராணி ஆகிய எல்லோருக்கும் உயர்வு கிடைத்து • قي-سا.تاكه