பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 261 வாழ்க்கை’, (1964) ஆகிய இரண்டு நூல்கள் பற்றிய விவரங்களை எழுதியிருந்தேன். பன்னுரல்களை எழுதித் தமிழ்த் தொண்டு புரிந்த எனக்குச் சாகித்திய அகாடமி பரிசு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது பேராசிரியரின் ஆசை என்பதை என்னால் ஊகம் செய்ய முடிகின்றது. இவரைத் தவிர என் நூல்களைப்பற்றி சாகித்திய அகாடமிக்குப் பரிந்துரைக்க ஒருவரும் முன்வரவில்லை. நான் கூட தமிழ்ப் பகுதிக்கு ஒர் ஐந்தாண்டுகள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தேன். அப் பொழுதுக.ட ஒருவரும் என் நூல்களை அறிமுகம் செய்ய முன் வரவில்லை. தமிழ் அறிஞர்களில் பலர் பொறாமைக் காய்ச்சலால் பீடிக்கப் பெற்றுள்ளனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கு அறியும். ஓர் உறுப்பினர் தம் நூல்களைப் பரிந்துரைக்கலாகாது என்பது அகாடமியின் விதிகளுள் ஒன்று. எனக்கு அகாடமிப் பரிசு கிடைக்காத துபற்றி வள்ளுவரின் பெறுவான் தவம்’ (குறள்-842) எனக்கு இல்லை போலும் என மன அமைதி கொள்ளுகின்றேன். யான் பரிசு பெற முயன்ற பேராசிரியர் இராகவனின் நல்லுள்ளத்தை வாழ்த்துகின்றேன். இதன்பிறகு இப் பெருமகனாரைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை. ஒரு சில ஆண்டுகட்குப் பிறகு அவர் திருநாடு அலங்கரித்த செய்தியைத்தான் நாளிதழின்மூலம் அறிந்து வருந்தினேன்.