பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பி. ரீ. ஆச்சாரியார் பி. பூரீ. ஆச்சாரியாரைத் தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்து வைப்பது சொல்லத் தெருவில் ஊசி விற்கும் கதைபோன்றது. இவர் தமிழுலகம் நன்கு அறிந்த எழுத்தான மேதை. ஒரு காலத்தில் கம்ப சித்திரக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் வெளிவந்து கொண் டிருந்தபோது நான் உயர்நிலைப்பள்ளி, கல்லூரி மாணாக்கன். அந்தக் காலத்தில் குறைந்த என் தமிழறி வைக் கொண்டு இவர் கட்டுரைகளை ஒரளவு சுவைத்து மகிழ்ந்தவன். தமிழகத்தில் மட்டுமன்று, பிற மாநிலங் களிலும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் கம்ப னைப் புகழ் பெறச் செய்தவர். பிறப்பிலேயே வைணவ சாதலால் ஆழ்வார்களை ஈரத் தமிழில் தமிழர்கட்கு தன்கு அறிமுகம் செய்தவர். கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் திவ்வியப் பிரபந்த சாரம்’ என்ற தலைப்பில் வெளிவந்த நூலைத் திருச்சி மாவட்ட நூலகத்தில் (மேலப் புல்வார்டு சாலையில் உள்ளது) மேலோட்ட மாகக் கற்று மகிழ்ந்தவன். துறையூரில் பணியாற்றிய போது இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்து விட்டது. இரண்டரை ரூபாய்க்குக் கிடைத்த இந்த நூலைச் சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டு இவருடைய கட்டுரைகளைக் கற்று மகிழ்ந்தவன். இதிலுள்ள 33 கட்டுரைகளும் கொஞ்சும் தமிழில் என் உள்ளத்தைக் கவர்ந்தன. பழமறைகள் முறையிடப்.