பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. பூரீ. ஆச்சாரியார் 365 கலைக் களஞ்சியப் பணி தொடங்கப்பெற்ற காலம். திரு. பெ. தூரன் அதன் தலையைப் பதிப்பாசிரியராக நியமனம் பெற்றிருந்தார். அவர் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த காலச் சக்கரத்தில் வெளியிடப்பெற்றிருந்த பத்துக் கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியிருந்தமையால் அதனைப் பற்றாசாகக் கொண்டு அவரிடம் ஓர் ஆணித் துரை பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அன்று மாலை ஏழு மணி சுமாருக்கு அவரைச் சந்தித்து என் வேண்டுகோளைத் தெரிவித்தேன். அப்போது அவர் புரசைவாக்கத்தில் குடியிருந்தார். அவரிடமிருந்தும் எதிர் மறையான மறுமொழியே வந்தது. மறுமொழியும் அகந்தை தொனிக்கும் பாணியில் இருந்தது. என்ன உலகமடா!' என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாள் முற்பகல் பத்து மணிக்கு திரு. ஏ. கே. செட்டியாரைச் சந்தித்து அவரிடமாவது அணிந்துரை பெறலாம் என்று கருதி குமரிமலர் அலுவலகம் (100, மாவ்பரீஸ் சாலை) சென்றேன். திரு. செட்டியாரவர்கள் ஊரில் இல்லாத சமயமாக இருந்தது. திரு. கோபாலன் அவர்கள்தாம் அலுவலகத்தில் இருந்தார். அணிந்துரை பெறுவதில் யான் மேற்கொண்ட முயற்சிகள் பலி யாமையை எடுத்துக் கூறினேன். திருமண முயற்சியில் வெற்றியடையாத இளைஞன் ஒருவன் எப்படியாவது உடனே திருமணம் முடிந்தாக வேண்டும் என்று ஒரு பெரிய வரின் உதவியையும் ஆசியையும் நாடுவது போலிருந்தது என் பேராவல். இலக்கிய உலகில் புகழ் பெற்றவரும், சிறந்த எழுத்தாளரும், நல்ல உள்ளமும் கொண்ட திரு. பி. யூரீ நம் அலுவலகத்திற்கருகிலுள்ள சீநிவாச அய்யங்கார் சாலையில் நம் அருகிலேயே அம்புஜம் அம்மாள் இல்லத்தில்தான் இருக்கின்றார்கள். அவரது அறிமுகமும் ஆசியும் உங்கள் முதல் நூலுக்கு உகந்ததாக இருக்கும் என்று தாமே புருஷகாரமாக நின்று என்னை இட்டுக் கொண்டு நேராக பி. பூரீ அவர்களைச் சந்திக்கச்