பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. பூரீ. ஆச்சாரியார் 267 படைத்து விடும் முறையில் நம் புதுமைத் தமிழ் இலக்கியம் வளர்ந்தோங்க வேண்டும். இந்த இலக்கியம் ஆழமாக வேரூன்றி வளர்வதற்குச் சங்க காலம் தொட்டுத் தமிழிலே வளர்ந்து வந்திருக்கும் இலக்கியங்களையும் தேவைக்குத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள லாம். அந்தப் பழைய இலக்கியங்களிலுள்ள பண்பாடும் இலட்சியங்களும் காந்தியத்திற்கு அரணாகி நமக்குத் தரும் கவசமாக அமையவும் கூடும் . நம் புதுமை இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன? எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதிக் குவித்த வண்ண மிருக்கின்றார்கள். நாவல்கள்’ என்ற நீண்ட நவீனக் கதைகளும் இடை இடையே வெளியாகின்றன. சிறுகதை களும் பெருங்கதைகளும் பெரும்பாலும் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாகவும், நமது வாழ்வோடு ஒட்டாத காதற் கதைகளாகவும் இருந்தபோதிலும் இவற்றிற். கெல்லாம் வாசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. கவிதைத் துறையிலும் சிலர் புதுமுறை களைக் கையாண்டு பலருக்கும் இன்பமூட்டி வருகிறார்கள். இவர்களில், பழைமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலம் போல் கவிதை இயற்றிவரும் கவிமணிதேசிய விநாயகம் பிள்ளையையும் தேசீயம், காந்தியம் என்ற புதிய சக்தி களைப் பாடிப் பரப்பிவரும் நாமக்கல் கவிஞரையும்: சமுதாயப் புரட்சிக் கவிஞரான 'பாரதிதாசன் அவர் களையும் முத்திறப் புதுமைக் கவிஞர்களாய்க் குறிப்பிட லாம். இவர்கள் பாரதியார் தோற்றுவித்த மறுமலர்ச்சி இலக்கியத்தை, அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிராகும் என்ற ரீதியில் மறுபோகமாகப் பயிர் செய்து வரு றார்கள். '