பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. பூரீ. ஆச்சாரியார் 念7莎 "இந்த ஆசிரியரின் தமிழ் நடை காலத்திற்கு இசைந்து வளர்ந்து வரும் நடைதான். வளரும் தமிழில் மலரும் இலக்கியத்திற்கு உரிய நடை. சங்க நூற்கட்டுரைகளையும் இத்தகைய வசன நடையில் எழுதினால்தான், சாதாரண உலக இன்பம் முதல் உயர்ந்த கொள்கைகள் வரையில் அறிருர்கள் சங்க இலக்கியங்களிலே கண்டுகளிக்கின்றார் களே, அந்தக் கருத்துச் செல்வம் முழுவதும் சாதாரண மக்களுக்கும் பயன்படுவதாகும். சுதந்திர இந்தியாவில் தமிழர்களின் புதுமைப் பெரு வாழ்வியக்கத்திற்கு, யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது போன்ற பழந்தமிழ்க் கொள்கைகளும் இன்றியமை யாதன அல்லவா?’’ இந்நூலில் அடங்கியிருக்கும் சங்க நூற்கட்டுரை களிலும் வேறு இலக்கியக் கட்டுரைகளிலும் ஆசிரியர் தாம் தமிழ்க் கடலில் மூழ்கி முத்துக் குளித்து வந்து இதோ பாருங்கள் சில ஆணித்தரமான முத்துக்களை!' என்று காட்டுகின்றார். தரம் அறிந்து முத்தும் முத்தமிழும்: போற்றிய தமிழ் நாட்டின் தற்கால மக்கள் இந்த ஆசிரியர் காட்டும் முத்துகளையும் தக்க முறையில் மதித்துப் போற்றுவர் என்பது என் நம்பிக்கை." ஒரு நூலுக்கு அணிந்துரை நல்கும் போக்கில் எத்தனை விதமான தனது நோக்கங்களையும் குறிக்கோள் களையும் காட்டி விடுகின்றார் பி.பூரீ சுதந்திர இந்தியா வின் போக்கு எப்படியிருக்க வேண்டும்? என்பதை எவ்வளவு துட்பமாகச் சுட்டிக் காட்டுகின்றார்! இசைக்கலை, நடனக்கலை, இலக்கியக் கலை இவற்றைக் காட்டும் போக்கில் தமிழின் பெருமையையும் நீர்மையையும் எடுத்துக்காட்டி அது புதுக்கோலத்துடன் எப்படி வளர வேண்டும்?என்பதையும்சுட்டியுரைக்கின்றார்.தமிழ்மொழி யின் சரிதத்தை பல் மைல் கற்களாகக் காட்டிப் படிப் போரை வியக்க வைக்கின்றார். பழந்தமிழ்க் கொள்கைகள் சுதந்திர இந்தியாவிற்கு எந்த அளவு பயன்படும்? என்பதை