பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இரசிகமணி டி. கே. சி 1949- த் திங்கள் இறுதியில் டி.கே.சி. என்று மூன்று எழுத்துகளால் நாடெங்கும் அறிமுகமான திரு.டி.கே சிதம்பரங்ாத முதலியாரை அடியேனுக்குப் புருஷகாரமாக நின்று அறிமுகம் செய்து வைத்தவர் திரு. K.S. முத்துவேல் பிள்ளையவர்கள். இந்த அறிமுகம் சென்னையிலிருந்துஇராமேச்சுவரம்-தனுஷ்கோடிவிரைவு இருப்பூர்தி திருச்சியில் நின்றபோது நடைபெற்றது. டி.கே.சி அவர்கள் காரைக்குடியில் நடைபெற்றுவரும் கம்பன் திருநாளில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி புரிந்தபொழுது அந்த ஊரில் பல பேரறிஞர்களைக் கொண்டு இலக்கியச் சொற் பொழிவுகளை நிகழ்வித்தும், பள்ளியில் பல தமிழறிஞர் களை வரவழைத்துத் தமிழ்ச் சொற்பொழிவுகளை ஏற்படுத்தியும் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய் வித்த அடியேனைக் காரைக்குடிக் கம்பன் திருநாளைக் காணச் செய்தல் வேண்டும் என்று கருதினார் திரு முத்து வேல் பிள்ளை. இதைக் காண்பதற்குப் பலமுறை பல நாட்களாக என்னை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார் திரு பிள்ளை அவர்கள். துறையூரிலிருந்து அதிகாலை 4-30க்குப் புறப்படும் பேருந்தில் என்னை இட்டுச் சென்று திருச்சியில் நின்று கொண்டிருந்த விரைவு இருப்பூர்தியில் 1. புருஷகாரம்-தகவுரை கூறுதல்