பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 275 டி.கே.சி அவர்கள் அமர்ந்திருந்த பெட்டியிலேயே என்னை யும் ஏற்றிப் பயணப்படுத்தினார்கள். என்னை அறிமுகப் படுத்தும் போது இவர் நல்ல தமிழறிஞர்; தமிழார்வம் மிக்கவர். அண்மையில் வித்துவான் பட்டத்தையும் பெற்றார். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்.” என்று முழங்கிய பாரதியின் கொள்கைகளைக் கடைப் பிடித்துத் தமிழைப் பரப்பி வருபவர்’ என்றெல்லாம் கூறி அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்குள் வண்டியும் புறப் பட்டு விட்டது. திரு. பிள்ளையும் எங்களிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டார். இந்தத் திரு. முத்துவேல் பிள்ளை யார் என்பதைக் சொல்லி விடவேண்டும். திருச்சி மாவட்டத்தில் முசிறி வட்டத்தைச் சேர்ந்த காட்டுப் புத்துார் இவர்சொந்த ஊர். இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பும் ஆணையத் $o (Cylon Labour Commission) G3 usurrorff (Agents பொறுப்பில் துறையூரில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். துறையூருக்கு வருவதற்கு முன்னர் திருநெல்வேலியில் இதே பணியில் பல்லாண்டுகள் செயலாற்றியவர். இந்தக் காலத்தில் திரு முத்துவேல் பிள்ளையவர்கள் டி.கே.சி. வட்டத்தொட்டியில் கம்பராமாயணம் கேட்ட அநுபவம் பெற்றிருந்தார். இந்த வட்டத்தொட்டியைப் பற்றியும் டி.கே.சி. அவர்கள் பற்றியும் திரு பிள்ளையவர்கள் என்னிடம் மிகவும் பாராட்டிப் பேசுபவர். இலக்கிய சங்கம் கூடும் இடந்தான் வட்டத்தொட்டி என்பது. நெல்லை வண்ணாரப்பேட்டையில் டி.கே.சி.யின் வீட்டின் முன்கட்டு ஒரு அகலமான கூடம். அந்த அகலமான 2. பா.க : தேசிய கீதங்கள்-தமிழ் 1.2