பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 277. டி.கே.சியையும் அப்போது கேள்விப்பட்டதில்லை. எங்கேயோ குக்கிராமத்திலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவனாகிய எனக்கு இத்தகைய வாய்ப்பு எப்படிக் கிடைக்க முடியும்? 1949-இல் முதன் முதலாகக் காரைக்குடிக் கம்பன் திருநாளுக்குச் சென்று நான்கு நாட்கள் பலருடன் பழகின பிறகுதான் டி. கே. சி, தீபன், இவர்களின் உறவு முறை தெரிந்தது; செருகுகவிகள், டி. கே. சி. திருத்திய கம்பராமாயணப் பாடல்கள் இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற் பட்டன. ü 體 口 விரைவு இருப்பூர்தியில் பயணம் செய்யும்போது சுமார் இரண்டு மணி நேரம் காரைக்குடி சந்திப்பு (Karaikudi Function) அடையும் வரை டி. கே. சியுடன் உரையாடல் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. உரையாடலின் போது அவரைப்பற்றி நான் அறிந்து கொண்டவை . நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த களங்காடு இவர் பிறந்த பூர்வீகமான ஊர். தென்காசியிலிருந்த தீத்தாரப்ப முதலியார் இவருடைய திருத்தந்தையார். ஆனால் களங்காட்டுத் தீத்தாரப்ப முதலியார் குமாரர் சிதம்பர நாத முதலியார் என்றுதான் பத்திரங்களிலும் அரசுக் கணக்குகளிலும் இவருடைய திருநாமம் பதியப் பெற்றிருக்கும். சுருக்கமாக க. தீ சிதம்பரநாத முதலியார் என்றே காணப்படும். ஆனால் கேயும் டியும்’ எப்படியோ இடம் மாறி டி. கே. சிதம்பரநாத முதலியார் என்று அவருடைய திருநாமம் நிலைத்து விட்டது. அல்லது தென்காசி களங்காட்டுச் சிதம்பரநாத முதலியார் என்றும் பத்திரங்களில் எழுதப் பெற்று தெ. க. சிதம்பர நாதன் என்றும் சிலர் அவர்களைக் கருதலாம். இதுவே திரு'வும் ரீ’யும் சேராமல் வெறும் டி. கே. சி.யாக இலக்கிய உலகில் வழங்கப்படுகின்றது. 口 口 口