பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 2&毒 வைத்தார்கள் டி.கே.சி. காரைக்குடியில் நடைபெற்ற மூன்றுநாள் திருவிழாவைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன். மூன்று நாட்களும் இரவு தங்கல் வி. கே. சி. நடராசன் இல்லத்தில்தான். இந்த அநுபவம் என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய அதுபவமாக இருந்தது. கம்பன் திருநாளில் யான் பெற்ற இலக்கிய இன்பத்தை யான் இங்குச் சொல்லுவது மற்றொன்று விரித்தல்' என்ற குற்றத்தின் பாற்படுமாதலால் அதனைக் கூறவில்லை. நான்காம் நாள் நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற விழாவுக்கு டி.கே.சி. வரவில்லை என்பதாக நினைவு. திரு. தொண்டைமான் அவர்களும் திரு. வி. கே. சி. நடராசன் அவர்களும் மட்டும் வந்தார்கள். எங்களை யெல்லாம் ஒரு காரில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். இந்தப் பயணமே ஒரு மகிழ்ச்சிச் செலவுபோல் அமைந்தது. அன்று மாலை சா.க.வின் கம்பன் வழிபாட்டையும் நால்வர் ஆற்றிய சொற்பொழிவுகளையும் கண்டும் கேட்டும் அடுத்த நாள் அதிகாலையில் திருச்சி திரும்பி னேன்; அங்கிருந்து துறையூர் வந்து சேர்ந்தேன். 口 巳 ú காரைக்குடியில் கம்பன் விழாவைத் தொடங்கி வைத்த டி.கே.சி.யின் பேச்சில் சத்துருக்கனைப் பற்றி வரும் ஒரு பாடல் அற்புதமாக விளக்கம் பெற்றதைக் கேட்டு மகிழ்ந்தேன். இரசிகமணியின் இதய ஒலியையே கேட்ட மாதிரி இருந்தது பாடலின் அவருடைய விளக்கம். டி.கே.சி. பேசுகின்றார்: நந்தியம்பதியிலிருந்து கொண்டு பரதன் இராமன் பாது கைகளை வைத்து வணங்கிக் கொண்டு மன்னர் பேராட்சியாளராக (Regent) அரசாள் இன்றான். பரதன் தெற்கு நோக்கியவண்ணம் இராமனது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். பதினான்கு ஆண்டுகளும் கழிந்து இராமன் வரவேண்டிய நாளும் வருகின்றது. இராமன் வரவில்லை. சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்' . தான் முன்னரே 1. யுத்த. மீட்சி-220.