பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 287 மூவரும் இல்லாதபோது அரசாள ஒருவன் வேண்டாமா? அதற்காகத்தான் நான் இருக்கின்றேன் போலும்! மானம், நாணம் இவற்றையெல்லாம் துறந்த ஒருவன் வேண்டாமா நாட்டை ஆள? அரசாளும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? அதுதானே நியாயம்? என்றெல்லாம் குமுறுகின்றான். நிலமகளின் சார்பாக வக்காலத்து வாங்கிக் கொண்டு ஒரு வக்கீல் பேசுவது போல் இருக்கின்றது சத்துருக்கனின் பேச்சு. கம்பன் பேசுகின்றான் சத்துருக்கனின் மூலமாக- பாட்டில்தான். கான்ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனவனைக் காத்துப் பின்பு போனானும் ஒருதம்பி! போனவர்கள் வரும்அவதி போயிற்று என்னா ஆனாத உயிர்விடஎன்று அமைவானும் ஒருதம்பி! அயலே நாணாது யானாம் இவ்அரசாள்வன்? என்னே இவ் அரசாட்சி? இனிதே அம்மா." (அவதி-கால எல்லை! தனக்கு நேர்ந்த கொடுமையினை வியக்கின்றான் சத்துருக் கனன். தான் மட்டிலும் நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்ப தாக்கி இறந்தான் தன் பரம்பரையில் வர வில்லையா? என்று கேட்டு அவன் மனம் துடித்து நிற்கின்றது. பூனை பதி போட்டுப் பாய்வதுபோல் கவிதையின் முந்தினவரியிலுள்ள கானாள என்ற எதுகை பதிபோட்டு, அடுத்த அடியிலுள்ள போனானும் என்ற எதுகையில் பாயும் 6. யுத்த மீட்சி-223